டெங்கு காய்ச்சல் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை !

Posted By:
Subscribe to Boldsky

டெங்கு காய்ச்சல்.தமிழகம் எங்கும் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது கடந்த பத்து நாட்களில் 600க்கும் மேற்ப்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சில யோசனைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர்ச்சி :

அதிர்ச்சி :

டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள், பொதுவாக மழைக் காலத்தில் மட்டுமே உற்பத்தியாகும். அந்த நிலை மாறி தற்போது எல்லா காலங்களிலும் உற்பத்தியாகிறது. மேலும் ஏடிஸ் கொசுக்களின் வாழ்நாள் முன்பு 20 நாட்கள் வரை இருந்தது. அதுவும் தற்போது 40 நாட்களாக அதிகரித்திருக்கிறது.

உலகம் முழுவதும் டெங்கு :

உலகம் முழுவதும் டெங்கு :

உலகெங்கும் ஆண்டுக்கு 6 கோடி பேர் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். 24,000 பேர் வரை டெங்குவினால் மரணமடைகின்றனர்.

ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது.

சுத்தம் :

சுத்தம் :

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், தேங்கியிருக்கும் சுத்தமான தண்ணீரில் உற்பத்தி யாகிறது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் தண்ணீரை சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்திட வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.

பகல் :

பகல் :

ஏடிஸ் கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கக்கூடியது.அதனால் இரவில் தூங்கச் செல்லும் போது கொசுவலை போட்டுக் கொள்வதை தவிர்த்து பகல் நேரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு பரவுமா? :

டெங்கு பரவுமா? :

பலரும் டெங்கு காய்ச்சல் என்பது தொற்று நோய்ப் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.

டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. ஆனால் டெங்கு பாதிப்பு இருக்கும் ஒருவரை கடித்த கொசு இன்னொருவரை கடிக்கும் போது அவருக்கும் டெங்கு பாதிப்பு வரக்கூடும்.

மீண்டும் மீண்டும் வரும் :

மீண்டும் மீண்டும் வரும் :

டெங்கு காய்ச்சலில் நான்கு வகை இருக்கிறது. அவற்றில் முதல் வகை டெங்கு காய்சல் மட்டும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வருவது.

மற்றவை பின்னாட்களில் உங்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.

காய்ச்சல் குறைந்தால் ஜாக்கிரதை :

காய்ச்சல் குறைந்தால் ஜாக்கிரதை :

காய்ச்சல் குறைந்ததும் உடலிலிருந்து டெங்கு வைரஸ் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இதற்குப் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமாகும்.

டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கும். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

உயிரிழப்பு :

உயிரிழப்பு :

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Important details about dengue fever.

Important details about dengue fever.
Story first published: Wednesday, September 6, 2017, 11:05 [IST]
Subscribe Newsletter