நிணநீர் மண்டலம் எவ்வளவு முக்கியமானது? அதை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

நிணநீர் மண்டலமானது நிணநீர் கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சதைகள், எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் சுரப்பியைக் கொண்டுள்ளது. இதன் பணி என்ன? இது உடலில் உள்ள செல்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

How To Cleanse Your Lymphatic System

இந்த மண்டலம் இரத்த செல்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றினால் தான், கல்லீரல் அல்லது சிறுநீரகம் டாக்ஸின்களை வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும். இவ்வளவு முக்கிய பணியை செய்யும் நிணநீர் மண்டலத்தில் டாக்ஸின்களால் அடைப்புக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே அவ்வப்போது நிணநீர் மண்டலத்தை நல்ல வடிவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். நிணநீர் மண்டலம் சுத்தமாக இருக்க வேண்டுமானால், அதற்கு குறிப்பிட்ட சில செயல்களை நாம் மேற்கொள்ள வேண்டும். இங்கு நிணநீர் மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாசித்தல்

சுவாசித்தல்

நன்கு ஆழமாக சுவாசிப்பதன் மூலம், உடலில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கும். இச்செயல் நிணநீர் மண்டலத்திற்கு உதவியாக இருக்கும். எப்போது நிணநீர் திரவங்கள் உடலினுள் நன்கு ஓடுகிறதோடு, அப்போது உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.

தண்ணீர்

தண்ணீர்

தினமும் போதுமான அளவு நீரைப் பருகுவதோடு, எலுமிச்சை ஜூஸை ஒரு டம்ளர் குடித்தால், நிணநீர் மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.

அதிலும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரைப் பருகுவதன் மூலும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, நிணநீர் மண்டலமும் வலிமையடையும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நிணநீர் மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. ஒருவர் தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், திசுக்களில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகரிக்கும்.

ஆனால் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, செல்களில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். குறிப்பாக குதிக்கும் படியான உடற்பயிற்சியை செய்து வந்தால், நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் தூண்டப்படும்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் குளோரோஃபில் உள்ளது. இது நிணநீர் மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஆகவே இந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழங்கள்

பழங்கள்

பழங்கள் உடலுக்கு வழங்கும் குறிப்பிட்ட நொதிகள், நிணநீர் மண்டலத்தை சுத்தப்படுத்தும். ஆகவே காலையில் பழங்களை சாப்பிட்டு, அன்றைய தினத்தை ஆரம்பியுங்கள்.

பிரஷ்

பிரஷ்

காலையில் குளிக்கும் முன், பாடி பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்து விடுங்கள். இது சருமத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். மேலும் இச்செயல் உடலில் நிணநீர் திரவ ஓட்டத்தைத் தூண்டும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகளில் ஃபேட்டி அமிலங்கள் உள்ளது. இந்த அமிலங்கள் நிணநீர் கணுக்களுக்கு மிகவும் நல்லது.

மசாஜ்

மசாஜ்

வாரம் ஒருமுறை பாடி மசாஜ் செய்வதன் மூலம், நிணநீர் திரவங்களின் ஓட்டம் உடல் முழுவதும் தூண்டப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Cleanse Your Lymphatic System

Are you wondering how to detoxify lymph nodes? Well, read on to know how to cleanse the lymphatic system...
Subscribe Newsletter