Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
ப்ளாஸ்டிக் அரிசி உண்மையில் இந்தியாவில் கிடைக்கிறதா அல்லது கட்டுக்கதையா?
ப்ளாஸ்டிக் அரிசி உண்மையில் இந்தியாவில் கிடைக்கிறதாஅல்லது கட்டுக்கதையா என இக்கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளலாம்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களான முக நூல், டிவிட்டர் போன்ற தளங்களிலும், வாட்ஸாப் போன்ற பகிர்வு தளங்களிலும் ஒரு அரிசி அலை அடித்து தற்போது ஓயத் தொடங்கி இருக்கிறது.
நாம் சமைத்து உண்ணும் அரிசி பிளாஸ்டிக் அரிசியா ? என்கிற ஒரு பகீர் கேள்வி தான் அது. தற்போது இது சார்ந்த பதிவுகளும், பகிர்வுகளும் குறைந்து இருந்தாலும் பலருக்கு இதற்கான கேள்விகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
நமக்கும் இருந்த பிளாஸ்டிக் அரிசி சார்ந்த இந்த கேள்விகளுக்கு பதில்களைத் தேடினோம். நாம் சேகரித்த விவரங்களை இங்கே தருகிறோம். இதை பகிர்வதன் மூலம் நமது வாசகர்களுக்கு பிளாட்டிக் அரிசி பற்றியான சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.

7 ஆண்டுகளுக்கு முன் :
பிளாஸ்டிக் அரிசி என்பது முதன் முதல் ஏழு வருடங்களுக்கு முன் 2010 இல் சீனா வில் இருந்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பற்றியான அதிகார பூர்வ செய்திகள் 2 மட்டுமே இந்த ஏழு வருடங்களில் வந்திருக்கிறது.

பெயர் வந்த காரணம் :
1. "தி கொரியா டைம்ஸ்" எனும் பத்திரிகை 2011 ஆண்டில் சீன நாட்டின் ஷங்க்சி மாநிலத்தில் உள்ள தையூன் எனும் இடத்தில் பிளாஸ்டிக் அரிசி எனப்படும் போலி அரிசி விற்கப்படுகிறது என செய்திகள் வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த பிளாஸ்டிக் அரிசி உருளைக் கிழங்கு மற்றும் பிளாஸ்டிக்கின் கலவை கொண்டு உருவாக்கப்படுகிறது என கூறப்பட்டது. இதனாலேயே இந்த போலி அரிசிக்கு பிளாஸ்டிக் அரிசி என பெயர் வந்திருப்பதாக கூறப்பட்டது.

ஆப்பிரிக்காவில் இறக்குமதி?
2. இரண்டாவதாக, பிபிசி செய்தி நிறுவனத்திடமிருந்து 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நைஜீரியாவிற்கு கப்பல் மூலம் பிளாஸ்டிக் அரிசி, 2.5 டன் எடையுடைய ஒரு மிகப்பெரிய சரக்காக கப்பலில் வந்தடைந்ததாக கூறப்பட்டது.
இது நைஜீரியா துறைமுக சுங்கத்துறை பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வந்தது. ஆனால் பிறகு "நைஜீரிய தேசிய உணவு மற்றும் மருந்துகளுக்கான நிறுவனம்" தாம் பறிமுதல் செய்தது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்றும் அவை பூச்சி, புழுக்கள் பிடித்து கெட்டுப் போன நல்ல அரிசி தான் எனவும் விளக்கம் கூறியது.
மேலே குறிப்பிட்ட இந்த செய்திகள் தான் தற்போது வரை பிளாஸ்டிக் அரிசிகள் பற்றி மிகப் பிரதான ஊடங்கங்களில் வந்த இரண்டு செய்திகள்.
இந்த இரண்டைத் தகவலைத் தொடர்ந்து காட்டு தீயைப் போல பிளாஸ்டிக் அரிசியைப் பற்றிய தகவல் பரவுவதற்கு சமூக வலைத்தளங்கள் தான் காரணம்.

இந்தியாவில் இருக்கிறதா?
இதற்கு நமக்கு இதுவரை சரியான பதில் இல்லை. ஏனென்றால் இதுவரை அப்படிப்பட்ட அரிசி இந்த ஏழு வருடங்களாக இந்திய உள்பட எங்கும் பிடிபடவில்லை.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தமிழகம், தில்லி, கர்னாடகம், தெலுங்கானா, போன்ற பல மாநில அரசுகளுக்கு, பல இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாடு அதிகளவில் இருக்கிறதென்று பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தும் எந்த புகாரும் தற்போது வரை உண்மை என்று நிரூபிக்கப் படவில்லை.

ப்ளாஸ்டிக் அரிசி செலவு அதிகம் :
இந்த பிளாஸ்டிக் அரிசி உற்பத்தி செய்யப் படுவது உண்மை என்றால் அஃது நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல்லிற்கு ஆகும் செலவை விட மிக அதிகமாக ஆகும்.
மேலும் இது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என எடுத்துக் கொண்டாலும் அந்த பிளாஸ்டிக் அரிசியின் விலையுடன் இறக்குமதி சுங்க வரியை சேர்த்தால் அதன் விலை எங்கோ போகும்.
இன்னொரு காரணம் நமது நாடே போதுமான அளவு நெல்லை உற்பத்தி செய்கிறது. அதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகப் பணம் கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அரிசிப் பந்திற்கான காரணங்கள்?
சரி அப்போது ஏன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சில காணொளிகளில் வடித்த அரிசி சாதத்தை பந்து போல் செய்து அதை கீழே போட்டால் அது மேல் எழுகிறது?
நாம் உண்ணும் நல்ல அரிசியில் 80% ஸ்டார்ச் உள்ளது. இந்த ஸ்டார்ச்சில் அமிலோஸ் மற்றும் அமிலோ பெக்டின் எனும் மூலக் கூறுகள் உள்ளன. நாம் அரிசியை சமைக்கும்போது இவை அரிசியை பெரிதாகவும், ஓட்டும் தன்மை கொண்டதாகவும் மற்றும் இலகுவாக நசுக்கும் அளவுக்கு மென்மையாகவும் மாற உதவுகிறது.
இதன் இத்தன்மையால் நம்மால் சாதத்தை பந்து போல் உருட்ட முடிகிறது. அவை காற்றுக்குள்ளும் நுழைவதால் நாம் கீழே போடும் போது அந்த அரிசி உருண்டை பந்து போல் மேல் எழுகிறது.
இதற்க்கு முழுக் காரணம் அமிலோஸ் மட்டுமே. அரிசியில் அதிகமாக அமிலோஸ் இருந்தால் அது கீழே போடும் போது அதிக உயரத்திற்கு மேலெழும்பும்.
ஆகவே பிளாஸ்டிக் அரிசிக்கான பயம் தற்போது இந்தியாவில் இல்லை என பல மாநிலங்களின் உணவு பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரிகள் பல்வேறு காலங்களில் தெரிவித்து உள்ளனர்.
பிளாஸ்டிக் அரிசியின் அடுத்த கட்ட புரிதல்களை நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.



Click it and Unblock the Notifications