டெல்லியில் அது தீவிரமாய் பரவும் ஸ்வைன் ஃப்ளூ- புதிய தகவல் !! எப்படி பரவுகிறது தெரியுமா?

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

டெல்லியில் அதிவேகமாக பரவி வரும் ஸ்வைன் ப்ளுவால் 166 பேர்கள் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகிறது. எனவே இதுவரை சராசரியாக 517 பேர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று ரிப்போர்ட் பதிவாகியுள்ளது.

இந்த தகவல் ஜனவரி - ஜீலை 2017 வரை பதிவாகியுள்ளது. இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் ஒரு பக்கம் இருக்கையில் இன்னும் 4 பேர்கள் உயிரைக் கொல்லும் இந்த வைரஸால் உயிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

Fresh Cases of Swine Flu Reported From Delhi, 517 Confirmed Cases; Know How It Spreads

போன வருடத்துடன் ஒப்பிடுகையில் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் இரட்டிப்பாக உள்ளது என்பது பரிதாபமான செய்தி. இதே சமயத்தில் போன வருடம் 193 பேர்கள் மட்டுமே ஸ்வைன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆரம்ப நிலையிலேயே இந்த வைரஸை கண்டறிந்து சிகச்சை மேற்கொள்ளவது மூலம் நோயின் தீவிரத்தை தடுக்கலாம். ஸ்வைன் ஃப்ளூவின் சில முக்கியமான அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.

காய்ச்சல்

இருமல்

சோர்வு

சளி

தலைவலி

ஸ்வைன் வைரஸ் எப்படி பரவுகிறது

ஸ்வைன் ப்ளூ சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றால் ஏற்படும் நோயாகும். H1N1 என்ற இன்புலன்ஸா ஏ வைரஸ் தான் இந்த தொற்றிற்கு காரணம். முதலில் இந்த வைரஸ் பாதிப்படைந்த பன்றிகளிடமிருந்து மனிதனுக்கு பரவியது. ஆனால் தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கிடையே அதிகமாக பரவி வருகிறது.

ஸ்வைன் ப்ளூ வைரஸ் பாதிப்படைந்த நோயாளிகளின் தும்மல் மற்றும் இருமல் திரவம் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக பரவுகின்றன.

Fresh Cases of Swine Flu Reported From Delhi, 517 Confirmed Cases; Know How It Spreads

இதற்கான சிகச்சை முறைகள் என்னென்ன

இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது. ஏனெனில் இந்த வைரஸில் நிறைய வகைகள் உள்ளன. மூன்று வகை ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஏ, பி மற்றும் சி ஆகும். சி வகை வைரஸ் மிகவும் கொடியது. உடனடியாக பாதிப்படைந்தவருக்கு வென்டிலேட்டர்(செயற்கை சுவாசக் கருவி) சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் ஸ்வைன் ப்ளுக்கான சிகச்சை வசதிகள் மற்றும் தனி அறை போன்றவற்றை ஏற்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

English summary

Fresh Cases of Swine Flu Reported From Delhi, 517 Confirmed Cases; Know How It Spreads

Fresh Cases of Swine Flu Reported From Delhi, 517 Confirmed Cases; Know How It Spreads
Story first published: Friday, August 11, 2017, 8:00 [IST]