உண்மையிலேயே ஆல்கஹால் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆல்கஹால் என்பது ஓர் மன அழுத்த பானமாகும். இதில் உள்ள ஏராளமான உட்பொருட்கள் உடலை நஞ்சடையச் செய்கின்றன. குறிப்பாக ஆல்கஹால் உடலில் உள்ள சுரப்பிகளையும் பாதிப்பதோடு, ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவையும் பாதிக்கிறது.

மேலும் ஆல்கஹால் உடலின் பல்வேறு இயக்கங்களைத் தாமதப்படுத்தும். சொல்லப்போனால், உடலின் பல செயல்களைத் தடையை உண்டாக்கும். இப்போது ஆல்கஹாலை ஆண்கள் குடித்தால், அது ஆண்களின் ஆண்மையை எப்படி பாதிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

ஆண்கள் ஆல்கஹாலைப் பருகினால், அது அவர்களின் பாலியல் இயக்கத்தைப் பாதிப்பதற்கு காரணம், ஆல்கஹால் டெஸ்டோஸ்டிரோன் அளவில் சரிவை ஏற்படுத்துவதால் தான்.

உண்மை #2

உண்மை #2

எப்போதாவது ஒரு பெக் அடித்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிக்கப்படாது, ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால் தான், டெஸ்டோஸ்டிரோனின் அளவில் பெரிய சரிவு ஏற்படும்.

உண்மை #3

உண்மை #3

யார் ஒருவர் வாரத்திற்கு 3 முறைக்கு மேல் குடிக்கிறார்களோ, அவர்களது டெஸ்டோஸ்டிரோன் அளவு மோசமாக பாதிக்கப்படும். இதனால் உறவில் ஈடுபடும் போது விறைப்புத்தன்மை பிரச்சனையால் பெரிதும் அவஸ்தைப்படக்கூடும்.

உண்மை #4

உண்மை #4

பொதுவாக மது அருந்திய பின், உடல் ரிலாக்ஸானது போல் உணர்வோம். ஏனெனில் குடித்த பின் மூளை பீட்டா-ஓபியோய்ட் எண்டோர்பின்களை வெளியிடும். இருந்தாலும் அவை டெஸ்டோஸ்டிரோன் கூட்டுச்சேர்க்கையை பாதிக்கும்.

உண்மை #5

உண்மை #5

ஆல்கஹால் இனப்பெருக்க பகுதியில் உள்ள குறிப்பிட்ட செல்கள் மற்றும் திசுக்களைப் பாதிக்கிறது. இதோடு, டெஸ்டோஸ்டிரோன் அணுக்களையும் பாதிக்கிறது.

உண்மை #6

உண்மை #6

ஆனால் எதையும் அளவாக எடுத்தால், அதனால் நன்மை தான் விளையும் என்பதை மறவாதீர்கள். அப்படித் தான் ஆல்கஹாலை அளவாகக் குடித்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு தற்காலிகமாக அதிகரித்து, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும். எனவே காதல் வாழ்க்கை சிறக்க முடிந்தளவு மதுவைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் எப்போதாவது 1 பெக் மட்டும் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does Alcohol Lower Testosterone Levels?

Does alcohol lower testosterone levels? Yes, it does. Read on to know more...
Story first published: Friday, February 10, 2017, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter