ஜூலிக்கு வந்தது ஹாலுசினேசன் என்று எப்பிடி கமல் ஹாசன் கண்டுபிடித்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இரண்டு வாரங்களுக்கு முன்னர், இணையத்தில் ஒரு மனக்குறைபாடைப் பற்றி அதிகம் தேடிப்பார்த்தார்கள், விவாதிக்கப்பட்டது. ஹாலுசினேசன் ( Hallucination). இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில் பிக் பாஸில் ஜூலி குறித்தான குறும்படம் ஒன்றை போட்டுக்காட்டி டி ஆர் பியை ஏற்றிக் கொண்ட தினத்தில், கமல் உச்சரித்த வார்த்தை இது.

Details about hallucination

அதற்கு பிறகான நாட்களில் நான் அப்டியா அக்கா என்று கேட்டு ஜூலி அழுக, கமலும் அடுத்த வாரம் சமாதானப்படுத்தினார். சரி இந்த ஹாலுசினேசன் என்றால் என்ன? யாருக்கு வரும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம் :

அறிமுகம் :

ஹாலுசினேசன் என்பது நிஜத்தில் இருப்பதல்ல, நம் மனம்,நாமாகவே கற்பனை செய்து கொண்ட ஒர் சம்பவம். இது உங்களின் ஐம்புலன்களையும் பாதிக்கும். இப்போது ஓர் அறையில் தனியாக இருக்கிறீர்கள், அப்போது யாரோ உங்களிடம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறீர்கள் என்றால் ஒரு குரல் கேட்கும்.ஆனால் உண்மையிலேயே அந்த அறையில் யாரும் இல்லை உங்களைத் தவிர வேறு யாரும் இல்லாத அறையில் ஓர் குரல் கேட்கிறதென்றால் அது உங்களின் கற்பனைக்குரல் தான். இதற்குப் பெயர் தான் ஹாலுசினேசன்.

Image Courtesy

விஷுவல் ஹாலுசினேசன் :

விஷுவல் ஹாலுசினேசன் :

இல்லாத பொருட்கள் இருப்பது போன்றே தோன்றும். அந்த இல்லாத பொருட்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் வாங்க நினைத்த விலையுர்ந்த செல்போனாக இருக்கலாம், நீங்க பார்க்க விரும்பிய நபராக இருக்கலாம், பார்க்க நினைத்த அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமான வடிவங்களாக இருக்கலாம்.

Image Courtesy

வாசம் ஹாலுசினேசன் :

வாசம் ஹாலுசினேசன் :

சுவை மற்றும் வாசத்தினை கற்பனையில் நினைத்துக் கொள்வது. நீங்கள் உட்கொள்ளும் உணவு உண்மையாக என்ன சுவையில் இருந்தாலும் அதைப் பற்றிய ஓர் பிம்பத்தை மனதில் உருவாக்கிக் கொள்வதால் அதன் சுவை வேறுபட்டதாக தெரியும். அதே போலத்தான் வாசமும். ரோஜாப்பூவை பார்த்து இது அழுகிவிட்டது. அருகில் சென்றாலே நாறிடும் என்று நினைத்துக் கொண்டே அதனை முகர்ந்தால் அழுகிய வாடை தான் வீசும். ஆனால் உண்மையில் ரோஜாப்பூ அழுகவில்லை என்பது தான் நிஜம்.

தொடுதல் ஹாலுசினேசன் :

தொடுதல் ஹாலுசினேசன் :

நம் உடலை யாரோ தொடுவது போல அல்லது நம் உடல் உறுப்புக்கு ஏதோ பாதிப்பு உண்டாவது போல தோன்றும். சுவரில் நிற்கும் பல்லி நம் உடலில் விழுந்தால், விழுந்த பலி அப்படியே ஊர்ந்தால் என்று மீண்டும் மீண்டும் அதைப்பற்றி சிந்திப்பதால் இந்த உணர்வு தோன்றுகிறது.

ஆடிட்டரி ஹாலுசினேசன் :

ஆடிட்டரி ஹாலுசினேசன் :

இது பெரும்பாலானோருக்கு ஏற்படுவது தான். யாரோ உங்களிடம் பேசுவது போல, அல்லது நிஜத்தில் இருக்கும் நபர் குறிப்பிட்ட விஷயத்தை உங்களிடம் சொன்னது போல தோன்றும். அவர் கோபமாக பேசுகிறார், எரிச்சலாக பேசுகிறார் என்ற பிம்பம் கூட உருவாகும். பேசுவதை தவிர்த்து பல்வேறு ஓசைகளும் கேட்கும்.

குறுகிய கால ஹாலுசினேசன் :

குறுகிய கால ஹாலுசினேசன் :

பயத்தினால் இந்த ஹாலுசினேசன் ஏற்படும். காதலில் இருப்பவர்கள் திடீரென இந்த உறவு முறிந்தால், என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால் என்று நினைக்கும் போது, அல்லது நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் இறந்துவிட்டால் என்று யோசிக்கும் போது நினைத்தது நடந்துவிட்டது போலவே உங்களுக்கு தோன்றும்.

Image Courtesy

ஏன் ஏற்படுகிறது? :

ஏன் ஏற்படுகிறது? :

மனநலத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் அல்லது குறைகளே ஹாலுசினேசன் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். இதைத்தவிர, அதிகமான போதைப் பொருட்களை பயன்படுத்துவது, சரியான தூக்கம் இல்லாதது, எப்போதும் பரபரப்பாக இருப்பது, எடுத்ததற்க்கெல்லாம் பயப்படுவது, தனிமையில் இருப்பதாய்,எல்லாரும் சேர்ந்து என்னை ஒதுக்குவதாய் நினைப்பது, போன்றவற்றாலும் ஹாலுசினேசன் ஏற்படும்.

இதைத்தவிர தீர்க்க முடியாத நோய் ஏற்ப்பட்டால், நுரையிரல் பாதிப்பு ஏற்ப்பட்டா,அதீத காய்ச்சல், வயதானவர்கள்,பார்வைக்குறைபாடு, கேட்பதில் குறைபாடு போன்றவை இருந்தால் கூட ஹாலுசினேசன் ஏற்படும்.

எப்படி கண்டறிவது :

எப்படி கண்டறிவது :

இல்லாதது இருப்பது போல, தெரிகிறது என்று நீங்கள் உணர்ந்ததுமே மருத்துவரை சந்திக்க மறுக்காதீர்கள். இன்னொரு நபருக்கு இந்த பாதிப்பு இருக்கிறதென்றால் அவர் பொய் பேசுகிறார் என்று ஒதுக்கிடாமல் இருங்கள். அவரை தனிமையில் விடுவதால்தான் இது அதிகரிக்கிறது.

எளிதாக குணப்படுத்தலாம் :

எளிதாக குணப்படுத்தலாம் :

ஹாலுசினேசன் என்பது பெரிய பிரச்சனை அதனை தீர்க்கவே முடியாது என்றெல்லாம் பயப்பட வேண்டாம். நண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவழிப்பது, தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்துவது, தகுந்த மருத்துவர்களிடம் கவுன்சிலிங் பெறுவது, எப்போதும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்வது போன்றவற்றால் இதனை தீர்த்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Details about hallucination

Details about hallucination
Story first published: Saturday, August 12, 2017, 12:58 [IST]