மூன்று மாதத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் அற்புத ஜூஸ்!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமலால் அவஸ்தைப்படுபவர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் இயற்கை நமக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஒருசில சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

Amazing Sugarcane Juice Remedy To Improve Immune System

அந்த உணவுப் பொருட்களை ஒருவர் தனது அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் எந்த நோயும் உடலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். தற்போது பெருகி வரும் நோய்களின் எண்ணிக்கையால், எப்போது ஒருவரை நோய்கள் தாக்கும் என்று சொல்ல முடியாது.

எனவே 'வருமுன் காப்பதே மேல்' என்னும் பழமொழிக்கேற்ப ஒவ்வொருவரும் நடந்து கொண்டால், நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி, வாழ்நாளின் அளவை நீட்டித்துக் கொள்ள முடியும். இங்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் வலிமையாக்கும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கரும்புச்சாறு - 1 டம்ளர்

இஞ்சி ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன்

கரும்பு

கரும்பு

கரும்புகளில் நொதித்த சர்க்கரை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, பாதுகாப்பையும் வழங்கி, நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் வலிமைப்படுத்தவும் செய்யும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள பீட்டா கரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்கள் அண்டாமல், உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

இதன் செய்முறை மிகவும் எளிது. கரும்பு சாற்றுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால் ஜூஸ் தயார்.

பருகும் முறை:

பருகும் முறை:

இந்த ஜூஸை காலையில் உணவு உட்கொண்ட பின் பருக வேண்டும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 3 மாதங்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காதவாறு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Sugarcane Juice Remedy To Improve Immune System

So, here is a powerful home remedy to improve your immune system.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter