For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலினுள் இருக்கும் உட்காயங்களை உடனடியாக சரிசெய்யும் அற்புத நாட்டு மருந்து!

இங்கு உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் உட்காயங்களை உடனடியாக எதிர்த்துப் போராடும் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொண்ட பின்னரும் அதற்கான விளைவுகள் வேறுபடும். ஆனால் நொதிக்க அல்லது புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்ட பின், மிகுந்த ஆற்றலுடன் மற்றும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வோம். ஏனெனில் இந்த உணவுகள் உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, லாக்டோஸ், ஸ்டார்ச், சர்க்கரை போன்றவற்றை உடைத்து, எளிதில் செரிமானமடையச் செய்யும்.

2-Ingredient Homemade Sauerkraut Recipe That Fights fat and Inflammation

பொதுவாக நம் உடலில் பல்வேறு வகையான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். இவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், உணவுகளை உடைக்கவும் செய்யும். அதுமட்டுமின்றி இந்த உணவுகள் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோபயோடிக்

புரோபயோடிக்

நல்ல பாக்டீரியாக்களை புரோபயோடிக் என்றும் சொல்வார்கள். இவை குடலில் உணவுகளை எளிதில் செல்ல வழிவகுத்து, செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு, குடலியக்கப் பிரச்சனை, குடலழற்சி நோய்களைத் தடுக்கும். அதோடு, புரோபயோடிக் கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடை குறையவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் உதவும்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் என்று சொல்லும் போது, பலருக்கும் தயிர் தான் நினைவிற்கு வரும். ஆனால் தயிரைத் தவிர, லஸ்ஸி, ஊறுகாய், கெபிர், சார்க்ராட் போன்றவையும் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் தான்.

நம் அனைவருக்கும் ஊறுகாய், லஸ்ஸி, தயிர் போன்றவற்றைத் தெரியும். ஆனால் சார்க்ராட் என்பது என்னவென்று தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை அந்த சார்க்ராட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

துருவிய முட்டைக்கோஸ் - 1 பெரிய கப்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் ஒரு பௌலில் முட்டைக்கோஸ், சீரகம் மற்றும் கல் உப்பை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் அதைப் போட்டு, அதன் மேல் பெரிய வெங்காயத் துண்டு வைத்து மூடி, அதற்கு மேல் காற்றுப்புகாதவாறு டிஸ்யூ பேப்பர் வைத்து, ரப்பர் பேண்ட் பயன்படுத்தி கட்டி, குளிர்ச்சியான இடத்தில் 2-4 வாரம் வைத்து, பின் பயன்படுத்த வேண்டும்.

எப்படி உட்கொள்வது?

எப்படி உட்கொள்வது?

இந்த முட்டைக்கோஸ் சார்க்ராட்டை சாலட் அல்லது சாண்ட்விச்சுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைவதோடு, உட்காயங்களும் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2-Ingredient Homemade Sauerkraut Recipe That Fights fat and Inflammation

The given 2 ingredient homemade sauerkraut recipe that fight fat and inflammation. Read on to know more...
Story first published: Tuesday, January 24, 2017, 10:38 [IST]
Desktop Bottom Promotion