For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன?

|

நமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!

என்னதான் பெரும் அந்தஸ்து மற்றும் வசதி இருந்தாலும் கூட கொலுசு மற்றும் மெட்டி வெள்ளியில் தான் அணிய வேண்டும் என்பது நமது சம்பிரதாயம். வெள்ளி பெண்களின் கால் நரம்பினை தீண்டும்படி இருப்பது அவர்களது காலில் இருந்து மூளைக்கு செல்லும் முக்கிய நரம்பை தூண்டுகிறது, இதனால் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் விளைகிறது....

நீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரியம்

பாரம்பரியம்

நகைகள் அணிவது என்பது நமது பாரம்பரியத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தங்கள், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

தங்கம்

தங்கம்

தங்கம் என்று மட்டுமில்லாமல் முத்து, வெள்ளி போன்று பலவகையான நகை அணியும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

வெள்ளி நகை

வெள்ளி நகை

வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது. பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி

உணர்ச்சி

ஆண்களை விட பெண்கள்அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள . வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

உணர்ச்சி

உணர்ச்சி

மேலும் வெள்ளி கொலுசு அணிவதினால் அந்த நரம்பில் ஏற்படும் தூண்டுதல் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதியாகிறது. இதன் காரணத்தினால் தான் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணியக் கூறப்படுகிறது.

சம்பிரதாயம்

சம்பிரதாயம்

நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது.

அறிவியல் காரணம்

அறிவியல் காரணம்

மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்திவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன.

இரண்டாவது விரல்

இரண்டாவது விரல்

பொதுவாக மெட்டி இரண்டாவது விரல்லில் தான் அணிவார்கள், அந்த இரண்டாவது விரல்லில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது.

நன்மைகள்

நன்மைகள்

இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் பெண்கள் கர்ப்பக் காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Indian Women Wears Anklets?

Do you know Why Indian Women Wears Anklets? read here in tamil.
Desktop Bottom Promotion