For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரில் கை நனைத்தால் உங்களுக்கு இது போன்று சுருக்கங்கள் ஏற்படுகிறதா?

|

நல்ல வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் நாம் நன்கு குளித்து முடித்து வந்த பிறகு ரிலாக்ஸாக உணர்வோம். காரணம் சுத்தமாக இருப்போம், சருமம் ஸ்மூத்தாக இருக்கும். ஆனால், அந்த சமயம் உங்கள் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தல் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். உலர்ந்த திராட்சையை போல.

இது போன்று உங்களுக்கு நேர்ந்ததுண்டா? நீண்ட நேரம் தண்ணீரில் ஊறி எழுந்து வந்தால், மழையில் நனைந்து வந்தால் கைகளில் தோல் சுருக்கங்களுடன் தோன்றும். உடலின் வேறு எந்த பகுதியிலும் இன்றி, பாதம் மற்றும் விரல் நுனியில் சுருக்கங்கள் ஏற்படுவது ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கேள்விகள்:

கேள்விகள்:

1. என்றாவது ஏன் நீரில் கையை நனைதவுடன் தோல் சுருங்குகிறது என எண்ணியதுண்டா?

2. உடலில் எங்கும் இல்லாமல், கைகளில் மட்டும் ஏன் தோல் சுருங்குகிறது?

3. குளிக்கும் போது உடலில் ஏன் இவ்வாறு ஏற்படுவதில்லை?

 ஏன் இவ்வாறு ஆகிறது?

ஏன் இவ்வாறு ஆகிறது?

அனைவருடைய சருமத்திலும் எண்ணெய் பசை இருக்கும். நீங்கள் நீண்ட நேரம் நீரில் குளிக்கும் போது, மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போது அல்லது நீண்ட நேரம் சோப்பு போட்டு கைகழுவும் போது, நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.

 தற்காலிகமானது

தற்காலிகமானது

இது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோல் வெளிப்புற சருமத்தை உள் இழுக்க செய்கிறது.

 பாதம், விரல் நுனி

பாதம், விரல் நுனி

நீங்கள் நன்கு கூர்ந்து கவனித்து பார்த்தல். நமது உடலின் ஒவ்வொரு பகுதியின் தோலும் வெவ்வேறு மாதிரி தன்மை கொண்டிருக்கும். பாதம், மற்றும் விரல் நுனி தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.

 தோள்கள், வயிறு, தொடை

தோள்கள், வயிறு, தொடை

தோள்கள், வயிறு, தொடை பகுதிகளில் நீங்கள் இது போன்று சுருங்குவதை ஒருநாளும் உணர்ந்திருக்க முடியாது. ஏனெனில், பாதம் மற்றும் விரல் நுனியில் இருக்கும் தோலை மேல் தோல் என அழைக்கின்றனர். இது ஏனைய உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானது ஆகும்.

 இறந்த செல்கள்

இறந்த செல்கள்

மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய இறந்த செல்கள் இருக்கும். எனவே, இது நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

 சுவாரஸ்யம்!

சுவாரஸ்யம்!

மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவெனில், நீரின் நனைந்து சுருக்கமடைந்து காணப்படும் போது அந்த பாகத்தில் உங்களுக்கு தற்காலிகமாக வலி உணர்வு தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Does Your Skin Get Wrinkly in Water?

Why Does Your Skin Get Wrinkly in Water? read here in tamil.
Desktop Bottom Promotion