உங்கள் கல்லீரல் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலிலேயே கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய உறுப்பு. இது உடலில் நூற்றிற்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. எனவே ஒருவரது உடலில் கல்லீரலின் நிலைமை மோசமாக இருந்தால், அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

கல்லீரல் எப்படி நூற்றிற்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகிறதோ, அதேப்போல் அந்த கல்லீரலில் 100-க்கும் அதிகமான நோய்கள் வரும். அதில் ஈரல் அழற்சி, மது சார்ந்த கல்லீரல் நோய், ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவை பொதுவானவை.

இந்த பிரச்சனைகளின் அறிகுறிகளை கண்டுப்பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் இவைகள் தீவிரமான நிலையில் தான் கண்டுபிடிக்கும் வகையில் அறிகுறிகளை வெளிப்படுத்தும். இங்கு ஒருவரது கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்று உப்புசம்

வயிற்று உப்புசம்

வாந்தி மற்றும் குமட்டல் பல உடல்நல பிரச்சனைகளுக்கான ஒரு பொதுவான அறிகுறி என்பதால், நிறைய பேர் சாதாரணமாக விட்டுவிடுவார்கள். ஆனால் இது கல்லீரல் அழுக்குகளை முழுமையாக வடிகட்டாமல் இருப்பதால் ஏற்படும். எனவே அடிக்கடி வாந்தி, குமட்டல் வந்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

பசியின்மை

பசியின்மை

கல்லீரலால் போதிய அளவில் பித்தநீரை உற்பத்தி செய்ய முடியாமல் இருந்தால், அதன் காரணமாக உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் பசியின்மையை சந்திக்க நேரிடும்.

சோர்வு

சோர்வு

திடீரென்று நாள் முழுவதும் மிகுந்த சோர்வை உணர்ந்தால், கல்லீரல் சரியாக வேலை செய்யாமல், இரத்தத்தில் அழுக்குகளின் தேக்கம் அதிகரித்து, அதன் காரணமாக தொடர்ச்சியான சோர்வை அனுபவிக்கக்கூடும்.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

கல்லீரல் உணவுகள் மற்றும் கொழுப்புக்களை செரிக்க பித்தநீரை உற்பத்தி செய்யும். எப்போது கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உணவுகளை செரிக்க முடியாமல் போகிறதோ, அதனால் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, பித்தகற்கள், மலச்சிக்கல், வயிற்று உப்புசம், மோசமான குடலியக்கம் போன்றவற்றாலும் அவஸ்தைப்படக்கூடும்.

மலத்தின் நிறத்தில் மாற்றம்

மலத்தின் நிறத்தில் மாற்றம்

கல்லீரல் சரியான அளவில் பித்தநீரை சுரக்காமல் இருந்தால், மலம் மஞ்சள், கிரே அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறும். இது என்றாவது ஒரு நாள் ஏற்பட்டால் பிரச்சனையில்லை. ஆனால் இதுவே நாள்கணக்கில் என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

சிறுநீர் பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் சிறுநீர் பச்சை அல்லது ப்ரௌன் நிறத்தில் வெளியேறினால், இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்து, கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்னும் நிலை வந்தால், அதனால் கண்கள், விரல்நுனி, நாக்கு மற்றும் சருமம் போன்றவை மஞ்சளாக இருக்கும். ஏனெனில் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதனால் இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அடிவயிற்றில் மாற்றம்

அடிவயிற்றில் மாற்றம்

அடிவயிற்றுப் பகுதியில் வீங்கமோ, வலியோ இருந்தால், அது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதுவும் இது ஒரு ஆரம்ப கால அறிகுறி. கல்லீரல் பாதிப்பு அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களில் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways Your Body Tries To Tell You That Your Liver Is Being Damaged

Here are some of the most common liver disease symptoms. Read on to know more...
Story first published: Friday, October 7, 2016, 11:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter