For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் ஏன் நோய்கள் தாக்குகின்றன?

|

உடலின் செயல் கடிகாரம் என்பது உடலின் செல்களில் தொடங்கி, பாகங்கள் வரை ஒரு சுழற்சியில் காலம் தவறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும். நமது சுவற்றில் தொங்கவிட்டிருக்கும் கடிகாரம் போலவே. எப்போது கிருமிகள் நமது செல்களை தாக்குகின்றதோ, அப்போது இந்த சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். விளைவு உடல் நலம் சரியில்லாமல் போகும்.

 Viral replication Increases in morning

கிருமிகள் எந்த சமயத்தில் மிக அதிகமாக பெருகும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். இதில் ஒரு நாளின் இறுதியை விட , காலையில்தான் கிருமிகள் பல மடங்கு வேகமாக பெருகும் என ஆய்வின் இறுதியில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்விற்காக சோதனை எலிகளிடம் பரிசோதனை செய்தார்கள். எலிகளுக்கு ஹெர்ப்ஸ் வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமிகளை உடலுக்குள் செலுத்தினர்.

பின்னர் அவைகளை கண்காணித்த போது. காலையில் இந்த வைரஸ் கிருமிகள் அதிக அளவில் பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. மாலை மற்றும் இரவுகளில் அவை பெருகவில்லை.ஆனால் நோயின் தீவிரத்தை பரவும் active phase நிலையில் இருந்திருக்கின்றன். மறு நாள் காலையில் இன்னும் பல மடங்கு அதிகம் பெருகுகின்றன.

இரவுகளில் நைட் ஷிஃப்ட் வேலைக்கு செல்பவர்களுக்கு நம் உடலில் செயல் கடிகாரம் பாதிக்கப்படுகின்றன. இது கிருமிகள் பெருக்கத்தை இன்னும் அதிகம் உண்டு பண்ணுகின்றன. இதனால் நைட் ஷிஃப்ட் செல்பரகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதற்கு காரணம்.

மற்றும் Bmal1 என்ற ஜீன் தான் செயல் கடிகாரத்தை ஒழுங்கு படுத்தும் ஜீனாகும். இது கிருமிகளால் ஏற்படும் செல் சிதைவை தடுக்கும். இந்த ஜீன் குளிர்காலத்தில் வேலை செய்யாமல் இருக்கிறது. வெயில் காலங்களில் தூண்டப்பட்டு வேகமாக செயல்புரிகிறது.

இதனால்தான் குளிர்காலத்தில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றன். எளிதில் நோய்களும் தாக்குகின்றன என ஆராய்ச்சியாளர் ரச்சேல் கூறுகிறார்.

இந்த ஆய்வைப் பற்றிய தகவல்கள் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற இதழில் வெளிவந்துள்ளது.

English summary

Viral replication Increases in morning

Viral replication Increases in morning
Story first published: Wednesday, August 17, 2016, 12:28 [IST]
Desktop Bottom Promotion