Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
உண்ணும் உணவால் மட்டுமல்ல, அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது!
உணவில் கெமிக்கல் இருந்தால் தானே ஆபத்து என பார்த்து பார்த்து சாப்பிடுவர்கள், கொஞ்சம் நீங்கள் உபயோகிக்கும் பொருட்களையும் பாருங்கள். ஏனெனில் "லீ யின்" என்னும் ஆராய்ச்சியாளர் தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் நாம் உபயோகிக்கும் எல்லா பொருட்களிலும் உள்ளது என எழுதியுள்ளார்.
நான் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து சோப்பு, நெயில் பாலிஷ் வரை தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் உள்ளதாம். அவை உடலில் கொழுப்பினை படிப்படியாக உண்டாக்கும். மேலும் பல பல நோய்களை அது உண்டாக்கும் வீரியமிக்கது.

உடல் பருமன் நமது பழக்கவழக்கம் மற்றும் மரபியல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல், தலேட் போன்ற கெமிக்கலினாலும் உண்டாகக்கூடியது என "லீ யின்" னுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும் இது இனபெருக்கத்திலும் நச்சு விளைவிக்க கூடியது.
இதனால் மரபணுவில் மாற்றம் வந்து அடுத்து வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இதைபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதால் இதை குறித்த விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.
பரிசோதனையில் எலியிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்லில் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் மனிதர்களுக்கும் இதே போன்று தீங்கை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கூடுமான அளவில் நாம் இயற்கையோடு ஒத்துப் போயிருந்தால் இன்று இதுபோன்று கூப்பாடு போட வேண்டியிருக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


