ஒருவருக்கு மாங்கனீசு குறைபாடு இருப்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலினுள் உள்ள பிரச்சனைகளை எப்போதுமே நம் உடல் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். அதிலும் திடீரென்று ஒருசில மாற்றங்களை நாம் உணர ஆரம்பிப்போம். உதாரணமாக, உங்கள் நகங்கள் திடீரென்று உடை ஆரம்பித்தால், அதற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் உள்ளது என்று அர்த்தம்.

அதுவும் ஏதோ ஒரு குறைபாடு நம் உடலில் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகத் தான் இருக்கும். நமக்கு எப்படி புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இன்றியமையாததோ, அதேப்போல் மாங்கனீசும் முக்கியமானது. இந்த மாங்கனீசு உடலில் நொதிகளை செயல்படச் செய்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை மெட்டபாலிசமடையச் செய்ய உதவும்.

இந்த மாங்கனீசு குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இப்போது நாம் ஒருவரது உடலில் மாங்கனீசு குறைபாடு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட்டு வலிகள் மற்றும் பலவீனமான எலும்புகள்

மூட்டு வலிகள் மற்றும் பலவீனமான எலும்புகள்

மாங்கனீசு குறைபாடு ஒருவருக்கு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளுள் மூட்டு வலிகளும், பலவீனமான எலும்புகளும் முதன்மையானதாகும். மாங்கனீசு சத்து தான் எலும்புகள் மற்றும் மூட்டுக்கள வலிமையடையச் செய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. ஆகவே உங்கள் மூட்டு வலிகள் மற்றும் பலவீனமான எலும்புகள் இருந்தால், உடனே அதற்கான சிகிச்சைகளை எடுத்து வாருங்கள்.

சோர்வு

சோர்வு

நீங்கள் திடீரென்று அளவுக்கு அதிகமான சோர்வை தொடர்ச்சியாக உணர்ந்தால், உங்களுக்கு மாங்கனீசு குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இரத்த சர்க்கரை பிரச்சனைகள்

இரத்த சர்க்கரை பிரச்சனைகள்

மாங்கனீசு குறைபாடு இருந்தால், இரத்த சர்க்கரையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த மாங்கனீசு குறைபாடு நீண்ட நாட்கள் நீடித்தால், பின் அதுவே சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.

அதிகமான இரத்தப்போக்கு

அதிகமான இரத்தப்போக்கு

மாங்கனீசு குறைபாடு இருக்கும் போது, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்த குறைபாடு பெண்களுக்கு அப்படியே நீடித்தால், அது மலட்டுத்தன்மையைக் கூட உண்டாக்கும்.

காயம் குணமாவதில் தாமதம்

காயம் குணமாவதில் தாமதம்

மாங்கனீசு குறைபாடு இருப்பவர்களுக்கு, சிறு காயம் ஏற்பட்டாலும், அது குணமாவதற்கு பல நாட்கள் ஆகும். உங்களுக்கும் இதேப்போல் காயம் குணமாவதில் தாமதத்தை உணர்ந்தால், சற்றும் தாமத்திக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

 சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

சரும அழற்சி மற்றும் வெளிரிய தோல் போன்றவைகளும் மாங்கனீசு குறைபாட்டிற்கான அறிகுறிகளாகும். நகங்கள் உடைவதும் உடலில் மாங்கனீசு குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

ஆகவே உங்கள் உடலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சையை மேற்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Symptoms Of Manganese Deficiency In The Body

Here are some top symptoms of manganese deficiency in the body. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter