Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
முதுகு வலி குணமாக இந்த யோகாவை ட்ரை பண்ணுங்க!!
இப்போது சிறுபிள்ளைகளுக்கும் முதுகு வலி வருகிறது. அதிக கனமான புத்தகப்பையை சுமப்பதும், சரியான முறையில் அமராததும் காரணமாக இருக்கலாம்.
பெரியவர்களுக்கு உடல் பருமன், அதிக நேரம் கணிப்பொறியின் முன் அமர்வது என காரணம் எதுவாகவும் இருக்கலாம். அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டால், நாளடைவில் தீராத வலியையும், மாத்திரைகளுடண் வாழ் நாளை கழிப்பதுமாக ஆகிவிடும்.

முதுகுவலிக்கு எத்தனையோ மருந்துகள், சத்து மாத்திரைகள் எடுத்திருப்பீர்கள், ஆனால் யோகாசனம் செய்திருக்கிறீர்களா? மிக எளிமையான ஆசனம் ஒன்று யோகாவில் உள்ளது. இது முதுகிற்கு பலமளிக்கும் வகையில் செய்யப்படுவதாகும்.
சுகாசனா :
சுகம் என்றால் எளிமையாக என்று சமஸ்கிருதத்தில் பொருள். பொருளுக்கு தகுந்தாற்போல் மிகவும் எளிமையான ஆசனம். எல்லா வயதினரும் செய்யலாம்.
செய்முறை :
முதலில் தரையில் கால் நீட்டி அமரவும். பின்னர் வலது காலை மடித்து, அதன் பின் இடது காலை மடித்து சம்மனமிட்டு அமரவும். பாதங்களின் வெளிப்பாகம் தரையோடு பதிந்து இருக்க வேண்டும்.
கைகள் மடிமீது தியான நிலையில் விரலை மடித்து வைத்திருங்கள். முதுகு நேராக இருக்க வேண்டும். நிதானமாக, ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். 5 நிமிடங்கள் பிறகு காலை மாற்றி இடது காலில் செய்யுங்கள்.
பலன்கள் :
முதுகு பலம் பெறும். மூளை புத்துணர்வு பெறும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.ஜீரண சக்தியும் மேம்படும். தெம்பாக இருக்கும்.
குறிப்பு :
மூட்டு வலி இருப்பவர்கள், டிஸ்க் பாதிப்பு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


