Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?
தூக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. அப்போதுதான் மூளை தன் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி, சுத்தம் செய்யும்.
ஏனெனில் அந்த சமயத்தில்தான் எல்லா உறுப்புகளும் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளும். மூளைக்கு எந்த வித வேலையும் இல்லாமல் தன் பணியினை செய்யும். அதனால் மறு நாள் காலை நாம் சுறுசுறுப்பாகவும் எனர்ஜியாகவும் இருக்கிறோம்.

ஏதாவது சில சமயங்களில் தூக்கமில்லாமல் இருந்தால் அது பாதிப்பில்லை. ஆனால் வாரம் மற்றும் மாதக்கணக்கில் தூக்கமில்லாமலிருந்தால் அது நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணும். அதிலொன்றுதான் ஸ்ட்ரோக்.
தூக்கமின்மை என்கின்ற இன்சோம்னியா வியாதியால் ஸ்ட்ரோக் வரலாம். அல்லது ஏற்கனவே ஸ்ட்ரோக்கின் பாதிப்பிலிருந்து விடுபட்டிருப்பவர்களுக்கு தூக்கமின்மை வியாதி ஏற்படும். அதுவே மறுபடியும் ஸ்ட்ரோக் வர வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஜெர்மனியில் உள்ள ஈஸன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில், ஸ்ட்ரோக் பாதிப்பிலிருந்து மீண்ட நோயாளிகள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஸ்ட்ரோக் வரலாம் அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் வரலாம் என தலைமை ஆராய்ச்சியாளர் டிர்க் ஹெர்மன் கூறுகிறார்.
இந்த பல்கலைக்கழகம் 12 விதமாக ஆய்வுகளை நடத்தியது. ஸ்ட்ரோக்கிற்கும் தூக்கமின்மைக்கும் இடையே உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த ஆய்வு நடந்தது. இதில் ஸ்ட்ரோக்கிலிருந்து மீண்ட நோயாளிகள் இரண்டு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ஒன்று ஸ்லீப் அப்னியா- அதாவது மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டாவது தூக்கமில்லாமல் விழித்துக் கொண்டிருக்கும் இன்சோம்னியா போன்ற வியாதி.
இந்த இரண்டு விதமான பிரச்சனைகளாலும் நோயாளிகள் மிகுந்த மன அழுத்தத்திற்குள் உள்ளாகிறார்கள். இதில் இரண்டாவது வகையான தூக்கமின்மையால் மறுபடியும் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் உள்ளன என கூறுகின்றனர்.
இந்த ஆய்வு ஜர்னல் நியூராலஜி என்னும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



