வெள்ளைப்படுதலின் போது புளிப்பு வாசனை வெளிவருவதன் காரணம் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் மத்தியில் வெள்ளைப்படுதல் இயற்கை. உடல் சூடு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வெள்ளைபடுதல் அதிகமாக இருக்கும் என கூறப்படுவதும் உண்டு. ஆனால், வெள்ளைப்படுதலின் போது சிலருக்கு வாசனை / நாற்றம் வேறுபட்டு தென்படலாம். முக்கியமாக புளித்த வாசனை தென்படுவது சில உடல்நல பாதிப்பு, நோய் தொற்று, பால்வினை நோயின் ஆரம்பக் காலகட்ட அறிகுறியாக கருதப்படுகிறது.

எனவே, ஒருவேளை உங்களிடம் தென்பட்டாலோ அல்லது, உங்கள் தோழி, தெரிந்தவர்கள் யாராவது இதுப் போன்ற மாற்றம் ஏற்படுவது பற்றி கூறினால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. அதற்கு முன் இது எதன் அறிகுறியாக வெளிப்படுகிறது என தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கையானது!

இயற்கையானது!

சிலர் மத்தியில் இது இயற்கையானதாக இருக்க கூடும். வெள்ளைப்படுதலில் வாசனை மாற்றம் அடைவதை வைத்து சில பெண்கள் மாதவிடாய் ஆரம்பமாவதை அறிந்துக் கொள்ள முடியும். புளிப்பு வாசனை வெளிப்படுவது சாதாரணமானது தான். ஒருவேளை எரிச்சல், வலி, சிவந்து காணப்படுதல் இருந்தால் நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பாக்டீரியல் வஜினோஸிஸ்!

பாக்டீரியல் வஜினோஸிஸ்!

பாக்டீரியல் வஜினோஸிஸ் என்பது ஒரு பெண்ணுறுப்பு தொற்று ஆகும். இது பலதரப்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் தென்படுகிறது. வெஜினாவில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது, இந்த தொற்று உண்டாக வாய்ப்புகள் உள்ளன. பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கும் போது வெள்ளைப்படுதலில் புளித்த வாசனை வரலாம்.

அறிகுறிகள்:

அறிகுறிகள்:

*சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

*உடலுறவில் ஈடுபட்ட பிறகு வழக்கத்திற்கு மாறான வெள்ளைப்படுதல் ஏற்படுவது.

*எரிச்சல்

*பெண்ணுறுப்பு சுற்றி அரிப்பு ஏற்படுவது

*வெள்ளைப்படுதலில் புளித்த வாசனை வாடுவது

யாரிடம் இது அதிகமாக தென்படுகிறது:

யாரிடம் இது அதிகமாக தென்படுகிறது:

*புதியதாக ஓர் நபருடன் உடலுறவில் ஈடுபடும் போது

*பலருடன் உடலுறவில் ஈடுபடும் போது

*ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபடும் போது

*கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடும் போது

ட்ரைக்கொமோனஸ் தொற்று:

ட்ரைக்கொமோனஸ் தொற்று:

ட்ரைக்கொமோனஸ் தொற்று என்பது ஓர் பால்வினை நோய் தொற்றாகும். இது சிறிய வகை பாக்டீரியாக்களால் உண்டாகிறது. இது இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

அறிகுறிகள்:

*சிறுநீர் கழிக்கும் போது வலி

*பெண்ணுறுப்பில் எரிச்சல்

*பெண்ணுறுப்பில் அரிப்பு

*மஞ்சள் நிற வெள்ளைப்படுதல்

*அடிவயிற்றில் வலி

*உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரியம்

இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து 5-28 நாட்களுக்குள் சிகிச்சை ஆரம்பிக்காமல் இருந்தால், இது எச்.ஐ.வி வரையிலான அபாயம் உண்டாக வழிவகுத்துவிடும்.

ஈஸ்ட் தொற்று:

ஈஸ்ட் தொற்று:

ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் கூட, வெள்ளைப்படுதலில் புளித்த வாசனை வர வாய்ப்புகள் உள்ளன. ஈஸ்ட் தொற்று மிக வேகமாக பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இடுப்பு அழற்சி நோய் (Pelvic Inflammatory Disease:)

இடுப்பு அழற்சி நோய் (Pelvic Inflammatory Disease:)

இந்த அழற்சி கருப்பை, சினைப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் வழியாக தொற்று ஏற்படுத்துகிறது. முதல் கட்டத்திலேயே இதற்கு தீர்வு காணாமல் போனால், இது மேக வெட்டை மற்றும் கிளமீடியா நோய் தாக்கம் உண்டாக காரணியாகிவிடும்.

அறிகுறிகள்:

அறிகுறிகள்:

*மாதவிடாய் மாற்றம்

*காய்ச்சல்

*அடிவாயிற்று வலி

*இடுப்பு வலி

*மாதவிடாய் இல்லாதபோது இரத்தப் போக்கு

*உடலுறவின் போது வலி

*சிறுநீர் கழிக்கும் போது வலி

*நடக்கும் போது வலி

இதை ஆரம்பத்திலேயே சரி செய்யாமல் விடுவது இனப்பெருக்க மண்டல உறுப்புகளை பாதித்துவிடும். இதனால், குழந்தை பெறுவதில் கூட பாதிப்புகள் உண்டாகலாம்.

பால்வினை நோய்கள்:

பால்வினை நோய்கள்:

மேலும், பால்வினை நோய் தாக்கங்கள் எற்பட்டிருந்தாலும் கூட வெள்ளைப்படுதலின் போது புளித்த வாசனை வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sour Smelling Vaginal Discharge: How Common This Condition Is?

Sour Smelling Vaginal Discharge: How Common This Condition Is?
Subscribe Newsletter