மன அழுத்தம் இவ்வளவு சரும பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் என்பது ஒருவரது உடலில் பல பிரச்சனைகளை எளிதில் வர காரணமாக இருக்கும். தற்போது நிறைய மக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுவதற்கு இந்த மன அழுத்தம் தான் காரணம்.

மன அழுத்தம் உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இங்கு மன அழுத்தம் எந்த மாதிரியான சரும பிரச்சனைகளையெல்லாம் உண்டாக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிச்சென் சிம்ப்ளெக்ஸ் கிரோனிக்கஸ்

லிச்சென் சிம்ப்ளெக்ஸ் கிரோனிக்கஸ்

மன அழுத்தம் மற்றும் நரம்பு பதற்றம் அதிகரிக்கும் போது, தோல் நிலையான லிச்சென் சிம்ப்ளெக்ஸ் கிரோனிக்கஸ் என்னும் சரும அரிப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆனால் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், இந்த நிலையை கட்டுப்படுத்தலாம்.

சொரியாசிஸ்

சொரியாசிஸ்

மன அழுத்தத்தால் சொரியாசிஸ் வராது. ஆனால் சொரியாசிஸ் பிரச்சனை இருக்கும் போது மன அழுத்தத்தினால் கஷ்டப்பட்டால், நிலைமை மோசமாகும். ஏனெனில் மென அழுத்தம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து மோசமாக்கும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

மன அழுத்தத்தின் போது வெளியிடப்படும் ஹார்மோன் இரத்த நாளங்களை சுருக்கி, உடலில் இரத்த ஓட்டத்தை மோசமாக்கும். உடலில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது, சருமம் வறட்சியடையும்.

ரோஸாசியா

ரோஸாசியா

மன அழுத்தம் ரோஸாசியாவை தூண்டும். மேலும் இந்த நிலை காரமான மற்றும் சூடான உணவுகளை உட்கொண்டால், அதிகப்படியான வெப்பநிலை மற்றும் கடுமையான உடற்பயிற்சியை செய்வதனாலும் ஏற்படும்.

முகப்பரு

முகப்பரு

வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள். நீங்கள் அதிகமாக டென்சனாகி மன அழுத்தத்தில் இருக்கும் போது, முகத்தில் பருக்கள் வருவதை நீங்கள் நன்கு காணலாம். இதற்கு காரணம் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் சருமத்தில் எண்ணெய் பசையை அதிகம் உற்பத்தி செய்வது தான்.

கருவளையம்

கருவளையம்

மன அழுத்தம் அதிகரிக்கும் போது, தூக்கமின்மை ஏற்பட்டு, அதன் காரணமாக கருவளையங்கள் ஏற்படும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, முகத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Skin Problems That Are Caused By Stress

Stress can have plenty of side effects. It can show up on your skin in the form of rashes and breakouts. Read on to know more...
Story first published: Friday, August 19, 2016, 19:06 [IST]
Subscribe Newsletter