For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான 6 காரணங்கள்!

|

பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றுக்கள் ஏற்படுவது குறைவு தான். இருப்பினும், ஆண்களுக்கும் இது ஏற்படுவதால், ஒவ்வொரு ஆணும் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்கு முன் சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று இருந்தால் தென்படும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று இருப்பின், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி, காய்ச்சல், அசௌகரியத்தை உணர்தல் போன்றவை தென்படும்.

இங்கு ஆண்களுக்கு சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான 6 காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் #1

காரணம் #1

பால்வினை நோய்

இளம் ஆண்களுக்கு பால்வினை நோய்கள் இருப்பின், அதன் காரணமாக சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில் பால்வினை நோய்க்கான பாக்டீரியாக்கள் சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றுக்களையும் உண்டாக்குகிறது. எனவே இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

காரணம் #2

காரணம் #2

சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய் தொற்று

சிறுநீர்ப்பை, சிறுநீர் வடிகுழாய் அல்லது சிறுநீரகங்களில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருப்பின், அது சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும்.

காரணம் #3

காரணம் #3

புரோஸ்டேட் பிரச்சனைகள்

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு புரோஸ்டேட் வீக்கம் ஏற்பட்டால், அதனால் கடுமையான சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றால் அவஸ்தைப்படக்கூடும். எப்படியெனில் புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடையும் போது, சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரை முழுமையாக கழிக்க முடியாமல் போய், பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றை உண்டாக்கும்.

காரணம் #4

காரணம் #4

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்க்ள், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரக கல் பிரச்சனை, சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றை உண்டாக்கும். இதற்கு சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஈரப்பதமான சூழலை உருவாக்குவதால், அது நாளடைவில் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும்.

காரணம் #5

காரணம் #5

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் வந்தால், அது நேரடியாக சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றை உண்டாக்காமல் இருந்தாலும், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கத் தூண்டுவதால், அதன் காரணமாகவும் சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

காரணம் #6

காரணம் #6

ஆன்டி-பயாடிக்ஸ்

ஆன்டி-பயாடிக்குகளை அளவுக்கு அதிகமாக எடுத்தால், அதன் காரணமாக சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Common Causes Of UTI In Men

Here are some common causes of urinary tract infection. Read on to know more...
Story first published: Friday, July 1, 2016, 18:06 [IST]
Desktop Bottom Promotion