Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்கள் வாழ்க்கை முறையை அழகானதாய் மாற்றும் சில விஷயங்கள்.
இளமையில் எதுவும் தெரியாது. மகிழ்ச்சியை மட்டுமே பார்க்கிறோம். ஆரோக்கியத்தை பற்றி நினைப்பதே இல்லை. இஷ்டப்படி உண்ணலாம்.நினைக்கும் போது தூங்கலாம் வாழ்வதே என்ஜாய் பண்ணத்தானே என்ற மனப்பாங்குடன் இருக்கிறீர்களா?
அப்படியெனில் நீங்கள் தவறான என்ணோட்டத்தில் இதனை பார்க்கிறீர்கள். வாழ்க்கை வாழவதற்கே என்பதில் நல்ல ஆரோகியமான வாழ்வும்தானே அடங்கியிருக்கிறது.
இளமையில் நினைத்தபடி வாழ்ந்து முதுமையில் நோயுடன் வாழ்வது சரியான முறையாகாது. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டியது நல்ல எண்ணங்களும், உணவுகளும் மட்டும்தான்.
அதற்காக எல்லாம் துறந்து வாழ வேண்டியது இல்லை. சின்ன சின்ன டிப்ஸ்களை கடைபிடித்தால் உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கை உங்கள் கையில்.இங்கே சொல்லப்பட்டிருக்கும் சில குறிப்புகளை பின்பற்றுங்கள் .
அதிக நேரம் அமர வேண்டாம் :
நீங்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்தால், கலோரிகள் உடம்பில் அதிகமாகும். செலவழிக்கப்படாத கலோரிகள் உடல் பருமனைதான் உண்டு பண்ணும். ஆக்வே போதிய இடைவெளியில் வேலியே சென்று விட்டு வாருங்கள். நீங்கள் சாதரணமாக நடப்பது, அமர்வது, குனிவது என குறைந்த பட்சம் 300-லிருந்து 2000 கலோரி வரை நீங்கள் செலவழிக்க வேண்டும்.

காலை வேளையை க்ரீன் டீ யுடன் ஆரம்பியுங்கள் :
க்ரீன் டீ யில் இருக்கும் ஃப்ளேவினாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலிற்கு எதிர்ப்பு திறன் அதிகரிக்க்சச் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது. ஆகவே காலை நேரத்தை பசுமையான க்ரீன் டீ யுடன் தொடங்கலாம்.
அதிக நீரை குடியுங்கள் :
இங்கு நம் பலபேருக்கு எத்தனை அளவு நீர் குக்கிறோம் என்பது தெரியாது. தாகம் வந்தால் மட்டுமே குடிக்கின்றோம். ஆனால் அது மிகவும் தவறு. போதிய இடைவேளைகளில் அடிக்கடி நீர் குடித்துக் கொண்டிருந்தால், நச்சுக்கள் வெளியேறி, சருமம் மிக அழகாகவும், இளமையாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாறு குடியுங்கள் :
வாரத்தில் மூன்று நாட்கள் எலுமிச்சை சாறு அல்லது சிட்ரஸ் வகை பழச் சாறுகளை குடியுங்கள். அவை விட்டமின் சி அதிகம் கொண்டிருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. எந்த நோயும் உங்களை அண்டாமல் கவசமாய் பார்த்துக் கொள்ளும்.
வாய் விட்டு சிரியுங்கள் :
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று ஜீனியஸான நம்ம முன்னோர்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட்டார்கள். ஆய்வுகள் இப்போது அவை உண்மை என்று நிரூபிக்கின்றன.
வாய்விட்டு சிரிக்கும்போது, உடலிலுள்ள, முக்கியமாய் முகத்திலுள்ள நாடி நரம்புகள் அனைத்தும் உயிர் பெறுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பாய்கிறது. உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்பை தானே சீர் செய்கிறது.
மணிக்கணக்காய் பீஸா கடைகளில் நின்று வாங்கும் உணவு பதார்த்டங்களை விட இவை மிகவும் சிம்பிளான விஷயங்கள்தான். உடலுக்கும் நல்லதை மட்டுமே தரும். நாம் உடலுக்கு நன்மை செய்துவிட்டால், அது நமக்கு ஆரோக்கியதை திருப்பித் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




