ஆண்கள் வெளியே சொல்ல முடியாமல் தயங்கும் சில விரை விதை புற்றுநோய்க்கான அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலான ஆண்கள் வெளியே சொல்ல முடியாத ஓர் பிரச்சனை தான் விரை விதை புற்றுநோய். கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள சுமார் 8,720 ஆண்களுக்கு விரை விதை புற்றுநோய் இருப்பது சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. அதுவும் 33 வயதுடைய ஆண்களுக்கு இப்பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு ஆணுக்கு விரை விதை புற்றுநோய் இருந்தால், குறிப்பிட்ட சில அறிகுறிகள் தென்படும். அதுவும் ஆண்களின் அந்தரங்க உறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். பல மருத்துவர்கள் 15 முதல் 40 வயதுடைய ஆண்கள் அடிக்கடி தங்களைத் தாங்களே சோதித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுய பரிசோதனை செய்வது எப்படி?

சுய பரிசோதனை செய்வது எப்படி?

ஆண்கள் தங்களது ஆண்குறியைப் பிடித்தவாறு, முதலில் ஒரு ஆண் விதையை சோதிக்க வேண்டும். அப்படி சோதிக்கையில் ஆண் விதையில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் அல்லது ஆண் விதையின் வடிவம், அளவில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அறிகுறி #1

அறிகுறி #1

விதைப்பை பாரமாக இருப்பது போன்று இருந்தால், அது விரை விதையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

அறிகுறி #2

அறிகுறி #2

ஆண்களின் அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலி அல்லது ஏதேனும் அழுத்தம் கொடுப்பது போல் உணர்ந்தால், அதுவும் விரை விதையில் பிரச்சனையை இருப்பதை உணர்த்தும்.

அறிகுறி #3

அறிகுறி #3

சிறுவர்களுக்கு விரை விதை புற்றுநோய் இருந்தால், அந்த சிறுவர்கள் சிறு வயதிலேயே பருவ வயதை அடைந்துவிடுவார்கள். அதுவும் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான ஆன்ட்ரோஜென்கள் கட்டிகளாகி, ஆண்களின் உடலில் ரோமத்தின் வளர்ச்சி அதிகரிக்கும், முகத்தில் மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிக்கும் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படும்.

அறிகுறி #4

அறிகுறி #4

விரை விதை பாதிக்கப்பட்டிருந்தால், மார்பக வளர்ச்சி அல்லது மார்பக பகுதியில் புண் போன்றவை ஏற்படும். ஏனெனில் குறிப்பிட்ட செல் கட்டிகளானது ஈஸ்ட்ரோஜெனை உற்பத்தி செய்து, மார்பகங்களை பெரிதாக்கும் மற்றும் பாலுணர்ச்சி குறைவாக இருக்கும்.

அறிகுறி #5

அறிகுறி #5

விதைப்பையில் வலி இருந்தோ, இல்லாமலோ இருந்து, அங்கு வீக்கம் அல்லது கட்டிகள் இருந்தால், அதுவும் விரை விதை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs Of Testicular Cancer Most Men Are Too Embarrassed To Talk About

Here are some signs of testicular cancer most men are too embarrassed to talk about. Read on to know more...
Story first published: Friday, October 28, 2016, 11:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter