Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஏன் ஆண்கள் உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரியுமா?
நின்று கொன்று சிறுநீர் கழிப்பதை விட, ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன.
நாம் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்பு வர உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம். ஆனால், நாகரீக வளர்ச்சி, பொது கழிவறை வடிவ மாற்றங்கள் உண்டான பிறகு, நின்று சிறுநீர் கழிப்பது தான் நாகரீகம். உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது அநாகரிகமான செயல் என்பது போல நகர மக்கள் பார்க்க ஆரம்பித்தனர் (என்னையும் உட்பட!)

ஆனால், இப்போது ஆய்வாளர்கள் ஆண்களும் நின்று சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுரைக்கின்றனர். இது ஏன்? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்று இனிக் காண்போம்...

காரணம் #1
ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைகிறது. மேலும், நோய் நுண்மங்கள் தொற்று உண்டாகும் விகிதமும் குறையும்.

காரணம் #2
உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கும் நல்லது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையால், கழிவறை, கழிவுகள் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களது வேலையும் எளிதாகும் என கூறுகிறார்கள்.

காரணம் #3
உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடியும். நின்றுக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போது இது முடியாது!

காரணம் #4
குறைந்த சிறுநீர் பாதை நோய் எனப்படும் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் நல்லது. ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை உதவுவதால் இதை சரி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காரணம் #5
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்களுக்கு உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது. ஆனால், ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சரி.



Click it and Unblock the Notifications
