For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மார்ட் போனை ஏன் பிரா மற்றும் பாக்கெட்டில் வைக்கக்கூடாது என தெரியுமா?

ஸ்மார்ட் போன் இல்லாத ஓர் நாளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. உணர்வு ரீதியாகவும், வேலை ரீதியாகவும் நம்முடன் மிகவும் ஒன்றிப்போய் இருக்கிறது ஸ்மார்ட் போன்.

|

ஸ்மார்ட் போன் இல்லாத ஓர் நாளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. உணர்வு ரீதியாகவும், வேலை ரீதியாகவும் நம்முடன் மிகவும் ஒன்றிப்போய் இருக்கிறது ஸ்மார்ட் போன். இன்னும் அதீத தொழில்நுட்ப கூறுகளுடன் ஸ்மார்ட் போன் விஸ்வரூபம் எடுக்கத்தான் போகிறது.

மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் 7 அன்றாட பழக்கவழக்கங்கள்!

ஆனால், இதனால் நமது ஆரோக்யத்தில், உறவில், அன்றாட வேலைபாடுகளில் என பலவற்றில் தீயத் தாக்கங்கள் உண்டாகின்றன. முக்கியமாக ஸ்மார்ட் போனை பெண்கள் பிராக்களிலும், ஆண்கள் பேன்ட் பாக்கெட்டுகளிலும் வைக்க வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மார்ட் போனும் புற்றுநோயும்!

ஸ்மார்ட் போனும் புற்றுநோயும்!

ஸ்மார்ட் போன்களை பிராக்களில் வைத்து பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகிறது என ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.

விந்தணு குறைபாடு!

விந்தணு குறைபாடு!

ஆண்கள் பாக்கெட்டில் மொபைல் போன்கள் அதிகம் வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. இதனால், நாள்பட ஆண்மை குறைபாடு உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஃபேஸ்மேக்கர்

ஃபேஸ்மேக்கர்

இதய பாதிப்பு உண்டாகி ஃபேஸ்மேக்கர் வைத்திருக்கும் பெண்கள் தவறுதலாக கூட ஸ்மார்ட் போனை பிராவில் வைக்கக் கூடாது. சிக்னல் தாக்கத்தால் ஃபேஸ்மேக்கர் செயல் தடைப்பட்டு போய்விடும்.

நரம்பியல் நிபுணர் கருத்து!

நரம்பியல் நிபுணர் கருத்து!

கால்கள், புட்டம், முதுகு வலி போன்றவை உண்டாகவும் இது ஓர் காரணமாக இருக்கிறது. ஆம், மொபைலை பேன்டின் முன் பாக்கெட் அல்லது பின் பாக்கெட்டில் அதிகம் வைப்பதால் தசை நார்களில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது.

கதிர்வீச்சு மூளையை பாதிக்கும்!

கதிர்வீச்சு மூளையை பாதிக்கும்!

ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளையின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும். இதனால், மனநிலை மாற்றங்கள் உண்டாகலாம்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

ஓர் ஆய்வில், ஸ்மார்ட் போன்களை அருகேயே வைத்து வேலை, உறங்கும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உண்டாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில், வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்க்க செய்யும் செய்கையால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.

தூக்கமின்மை!

தூக்கமின்மை!

அடிக்கடி அதிகமாக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், உறக்கநிலையில் சீர்கேடு உண்டாகிறது. இதனால், இரவு நேரத்திலாவது ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

வெடிக்கும் அபாயம்!

வெடிக்கும் அபாயம்!

இது மிக அரிதாக நிகழும் விஷயம் எனிலும், நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், தொடர்ந்து சிக்னல் மற்றும் டேட்டாக்களை ரிசீவ் செய்துக் கொண்டே இருப்பதால், வெடிக்கும் அபாயம் இருக்கிறது.

அதே போல இதனால் மொபைல் அதிக சூடாகும். இது உடலுக்கு நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason Why You Must Not Keep Smartphones In Bras Or Pockets

Reason Why You Must Not Keep Smartphones In Bras Or Pockets
Desktop Bottom Promotion