60 நொடிகள் விரலில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உடல் உறுப்பு இயக்கத்தில் ஏதேனும் குறைபாடு அல்லது செயற்திறன் தொய்வுக் காணப்பட்டால், உடனே இரசாயனம் கலப்புள்ள மருந்துகளை தான் உட்கொள்ள வேண்டும் என்றில்லை. உங்கள் கைகளிலேயே வைத்தியம் இருக்கிறது.

Press The Forefinger For 60 Seconds

ஆம், உங்கள் கைவிரல்கள் மற்றும் உள்ளங்கையில் சற்று அழுத்தம் கொடுத்து 60 நொடிகள் பயிற்சி செய்தாலே, உங்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்தை தூண்டிவிட முடியும், மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

மிருதுவான முறையில், உங்கள் விரல்களுக்கு மசாஜ் போல அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் பெரும் நன்மைகள் பற்றி இனிக் காணலாம்...

கட்டைவிரல்: உங்கள் கட்டை விரலில் அறுபது நொடிகள் தினமும் அழுத்தம் தருவதால், நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறும். உங்களுக்கு இதய துடிப்பு வேகமாக இருக்கும் பிரச்சனை இருந்தால், இந்த பயிற்சியினால், இதயத் துடிப்பை சீராக்க முடியும்.

ஆள்காட்டிவிரல்: ஆள்காட்டி விரல் வயிறு மற்றும் பெருங்குடலுடன் சார்புடையது. இங்கு நீங்கள் 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், வயிறு வலி குறையும், செரிமானம் சீராகும்.

நடுவிரல்: நடுவிரல் சிறுகுடல், இதயம், இரத்தம், சுவாசக் குழாய் பகுதிகளோடு தொடர்புடையது. இந்த விரலில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து பயிற்சி செய்வதால், குமட்டல், தூக்கமின்மை, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவைக்கு தீர்வுக் காண முடியும்.

மோதிரவிரல்: மோதிரவிரல் உங்கள் உணர்ச்சி, மனநிலையுடன் தொடர்புடையது. இது மன அழுத்தம் குறைய பயனளிக்கிறது.

சுண்டுவிரல்: சுண்டுவிரல் உங்கள் சிருநீரகத்துடன் தொடர்புடையது. இது, கழுத்து வலி, தலைவலி போன்றவற்றை குறைக்கவும், பெரியவலிநிவாரணியாகவும் பயனைளிக்கிறது.

உள்ளங்கை: உங்கள் உள்ளங்கை நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. இங்கு 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மனநிலையை மேம்பட வைக்கலாம். சாதாரணமாக கைத்தட்டுவது போல பயிற்சி செய்தாலே போதுமானது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

English summary

Press The Forefinger For 60 Seconds

Press The Forefinger For 60 Seconds
Subscribe Newsletter