நமக்கே தெரியாமல் நம் உடலில் நடக்கும் 8 விசித்திரங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

எந்த ஒரு விஷயமும் வெறுமென எந்த காரணமும் இன்றி நடப்பது இல்லை. இது வெளியுலக செயல்களுக்கு மட்டுமின்றி நமது உடலில் ஏற்படும் செயல்களுக்கும் கூட பொருந்தும். நாம் இதுவரை பொருட்படுத்தாத, சட்டைசெய்யாத சில விஷயங்கள் கூட நமது உடலை பாதுகாக்க தான் நடந்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.

புல்லரிப்பு, வியர்வை, தும்மல் போன்றவை ஏதோ வெறுமென நமது உடலில் ஏற்படும் செயல்கள் அல்ல. வேலை எதுவும் செய்யாத போதிலும் கூட சிலருக்கு வியர்ப்பது ஏன் என்பது பற்றி நீங்கள் என்றாவது யோசித்து உண்டா? காரணமே இன்றி, அரிப்பு ஏற்படாமல் நீங்களாக கைகளை சுரண்டிக் கொண்டு, அரித்துக் கொண்டு இருந்தது ஏன் என்று தெரியுமா?

இவை எல்லாம் நமது உடலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சில விசித்திரமான செயல்கள் ஆகும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புல்லரிப்பு (Goosebumps)

புல்லரிப்பு (Goosebumps)

சில நேரங்கில் நமது சருமத்தின் மீது பிம்பிள் போல நுண்ணிய திட்டுக்கள் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நமது உடல் அதிகமான குளிர்ச்சியை உணரும் போது, இது ஏற்பட்டு முடிந்த வரை சூட்டை அதிகரிக்க செய்து உடலின் வெப்பத்தை சமநிலை ஆக்குகிறது.

வியர்வை

வியர்வை

புல்லரிப்பை போல தான் வியர்வையும். சில சமயங்களில் வேலையே செய்யாமல் வியர்வை வெளிப்படும். இதற்கு காரணம், நமது உடலில் அதிக வெப்பம் ஏற்படும் போது குளுமையாக்க வியர்வை வெளிவருகிறது.

சளி

சளி

சுவாச குழாய் மற்றும் நுரையீரலில் தேங்கும் நச்சுக் கிருமிகளை வெளியேற்றும் வகையில் தான் சளி வருகிறது. சளியை பொறுத்துக் கொள்வது கடினம் எனினும் கூட, அது வரவில்லை எனில் நுரையீரலில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

தும்மல்

தும்மல்

சளி ஏற்படும் போது, கிருமிகளை எதிர்த்து போராடும் போது தான் தும்மல் வருகிறது. இதன் மூலம் உடலில் இருந்து நச்சுக் கிருமிகள் வெளியேற்றப் படுகின்றன. அதிகபட்சம் தும்மலின் வேகம் 100 மைல் என்றும், சராசரியாக 40 மைல் வேகம் எனவும் கூறப்படுகிறது.

அழுகை

அழுகை

அழுகை வரும் போது சிலர் அடக்க முயற்சிப்பார்கள். ஆனால், நியூயார்க்கில் உள்ள வாசர் கல்லூரி பேராசிரியர் ராண்டால்ப் கொர்நேலியு, "அழுகை என்பது நமது கண் விழிகளை சுத்தம் செய்ய மட்டுமின்றி, நமக்கு நெருக்கமானவர்களுக்கான ஓர் சிக்னலாகவும் பயன்படுகிறது" என கூறுகிறார். மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள் மத்தியிலும் இது இருக்கிறது. இது மனோதத்துவ ரீதியான செயல்பாடு என்கின்றனர்.

நாணுதல்

நாணுதல்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் துறை நிபுணர்கள், நாணுதல் என்பது இருவர் மத்தியிலான தொடர்பை புரியவைக்க தானாக உருவான ஒன்று எனவும், இது மனநிலையை வெளிப்படுத்த, உளவியல் ரீதியாக ஒருவருக்கு தெரிவிக்க உதவும் கருவி என்றும் கூறுகிறார்கள்.

அரிப்பது

அரிப்பது

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (Washington University School of Medicine Pain Center) ஆய்வாளர் மருத்துவர் சவ் பெங் சென், "சருமத்தில் எந்த ஒரு தொற்று அல்லது பாதிப்பு இல்லாத போதிலும் கூட நாம் சில நேரத்தில் அரித்துக் கொள்வது உண்டு. இது சருமத்தில் இருக்கும் நரம்பு, சூழ்நிலை சரியில்லை என மூளைக்கு அனுப்படும் ஒருவகையான சிக்னல் எனப்படுகிறது. சில சமயங்களில் இது இன்பமாக கூட இருக்கும். ஆனால், அடிக்கடி சிலர் அரித்துக் கொண்டே இருப்பது தீயப் பழக்கம்." என்று கூறுகிறார்.

அட்ரீனலின் ரஷ்

அட்ரீனலின் ரஷ்

திடீரென அதிகரிக்கும் உடல்நிலை மாற்றங்கள். இதுவா? அதுவா? என இரண்டில் ஏதேனும் ஒன்றை நாம் தேர்வு செய்ய அடிவயிற்றில் ஓர் படபடப்பு ஏற்படும். மிக துரிதமாக முடிவெடுக்கும் போது இவ்வாறு ஏற்படுவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natures Eight Bizarre Bodyguards You Did Not Know Until Now

Do you know about Nature’s 8 bizarre bodyguards? Read here in Tamil.
Subscribe Newsletter