For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுடைய மூளையின் அளவு சுருங்கி விட காரணமாக இருக்கும் பழக்கங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

செரிபெரல் அட்ரோஃபி (Cerebral Atrophy) என்பது மூளையை பாதிக்கக் கூடிய பல்வேறு நோய்களில் ஒன்றாகும். எந்தவொரு திசுவிலும் அட்ரோஃபி என்று அழைக்கப்படுகின்ற செயல்நலிவு ஏற்படும் போது அதனுடைய அளவு குறையத் தொடங்கும்.

இதன் காரணமாக சைட்டோபிளாஸ்மிக் புரோட்டின்களின் அளவு தொடர்ச்சியாக குறையத் தொடங்கும். மூளைச் செல்களை பொறுத்த வரையில் அட்ரோஃபி என்பது நியூரான்கள் மற்றும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளின் இணைப்பு மற்றும் இழப்பையுமே குறிக்கிறது.

சுருக்கமாக சொல்லப்போனால், மூளையின் உருவ அளவு குறையத் தொடங்கும். அச்சமாக இருக்கிறதா? இது நமக்கு வயதாகும் போது ஏற்படக் கூடிய சாதாரணமான விஷயம் தான்.

எனினும், இன்றைய வாழ்க்கை முறைகளில் நாம் பின்பற்றி வரும் சில பழக்க வழக்கங்களின் காரணமாக இந்த செயல்பாட்டின் வேகம் அதிகரிக்கக் கூடும் மற்றும் நமக்கு வயதாவதற்கு முன்னதாகவே மூளையின் அளவும் குறையலாம்!

எனவே, இங்கே சில பழக்கவழக்கங்களும் மற்றும் அவை மூளையின் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் பலமான எதிர்விளைவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை நம்முடைய சிந்திக்கும் திறனை நிறுத்தவும், காலப்போக்கில் மூளையின் பணித்திறனை வெகுவாக பாதித்து, செயல்படாத நிலையை ஏற்படுத்தவும் வல்லவையாக உள்ளன.

இந்த பழக்கவழக்கங்களைத் தவிர்த்து விட்டு, பிற விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் மூளைக்கு பயிற்சிகள் கொடுப்பதுடன், அதனை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

எனவே, இந்த ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை நீங்கள் இதுவரையிலும் பின்பற்றி வந்திருந்தால், நினைவில் கொள்ளுங்கள் - அவற்றை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே பாசிட்டிவ் ஆக யோசித்து மூளையின் அளவு சுருங்குவதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவுக்கு 'குட்பை'

காலை உணவுக்கு 'குட்பை'

காலை சிற்றுண்டியை சாப்பிடுவது மூளையின் செயல்பாடுகளில் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு காலையில் சாப்பிடக் கூடிய உணவுகளால் வெளிப்படக் கூடிய சில வகையான வேதிப் பொருட்கள், பாசிட்டிவ்வான எண்ணங்களை உருவாக்க வழி செய்கின்றன. நீங்கள் காலை உணவை சாப்பிடுவதற்கு 'குட்பை' சொல்லி விட்டால் இந்த செயல்பாடு நடைபெறாது. எனவே மனதின் சுறுசுறுப்பு பாதிக்கப்படும். இது தொடர்ச்சியான பழக்கமாக இருந்தால், மூளையின் அளவு சுருங்குவதை யாராலும் தவிர்க்க முடியாது.

போதுமான தூக்கமின்மை

போதுமான தூக்கமின்மை

போதுமான அளவு தூங்காமல் இருப்பதன் காரணமாக மூளையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மூளையின் விழித்திருக்கும் நிலை மற்றும் கவனம் ஆகியவற்றின் அளவு குறைகிறது.

உடற்பயிற்சியை தவிர்த்தல்

உடற்பயிற்சியை தவிர்த்தல்

சோம்பேறியாக இருப்பதும் மற்றும் வேலை செய்யாமல் இருப்பதும் ஒட்டுமொத்த உடலுக்கே நல்லதில்லை. சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமாக உங்களுடைய மூளையின் சிந்தனைத் திறனை அதிகரிக்க உதவுகிறீர்கள். ஆனால் இதை தவிர்க்கும் போது மூளை சுருங்கிவிடும்.

போன்!?

போன்!?

நாம் தினசரி செய்யக்கூடிய சில பழக்கவழக்கங்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு உலை வைக்கின்றன. எப்பொழுது பார்த்தாலும் போனை பார்த்துக் கொண்டிருப்பது மூளைக்கு நல்லதல்ல. ஏனெனில் அதிலிருந்து வெளிப்படக் கூடிய நீலநிற ஒளி, மிகுந்த சூரிய வெளிச்சம் உள்ள நேரங்களில் மொபைலின் திரையில் உள்ளவற்றை படிக்க உதவினாலும், ஆபத்தையே விலைக்கு வாங்குகிறது. ஏனெனில், அந்த ஒளி சூரிய வெளிச்சத்தின் பிரதியாகவே உள்ளது. இதன் காரணமாக உங்களுடைய மூளையில் உற்பத்தியாகும் மெலாடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் தான் குறித்த நேரத்தில் உறங்குவதற்கான தூண்டுதலை நமக்கு கொடுக்கிறது.

வேண்டாம் தண்ணீர்!

வேண்டாம் தண்ணீர்!

வருடம் முழுவதும் குடிக்கக் கூடியதொரு சிறந்த பானமாக உங்களுடன் இருப்பது தண்ணீராகும். சரியான இரத்த ஓட்டத்தை உடலுக்கு கொடுத்து, உங்களை சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது தண்ணீர் தான். உடலின் மற்ற பாகங்களை விட மிகவும் அதிகமான அளவுக்கு தண்ணீர் தேவைப்படுவது மூளைக்குத் தான். ஏனெனில், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மூலமாக சென்று வரும் இரத்ததத்தில் 20%-ஐ மூளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கும். மேலும், மூளையின் செல்களில் 85% தண்ணீராகும்.

ஆளைக் கொல்லும் ஆல்கஹால்

ஆளைக் கொல்லும் ஆல்கஹால்

ஆல்கஹால் குடிக்கலாம் தான், ஆனால் அளவுக்கு மீறி ஆல்கஹால் குடித்து போதைக்கு அடிமையாகி விட்டால் அது உங்களுடைய மூளையை மட்டும் சும்மாவா விட்டு விடும்! ஆல்கஹால் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய காரணியாக இருப்பதால், அது மூளையிலிருந்து செயல்படும். இதன் மூலம் ஒரு மனிதருடைய சிந்தனை மற்றும் செயலூக்கம் பாதிக்கப்படும்.

'அந்த மாதிரியான' மருந்துகள்

'அந்த மாதிரியான' மருந்துகள்

சட்டப்பூர்வமாக வெளியிடப்படாத மருந்துகளை பயன்படுத்துவதால் உங்களுடைய மூளையிலுள்ள நரம்பு செல்கள் பாதிக்கப்படும். அவை நினைவாற்றல் இழப்பை தூண்டுவதுடன், சிந்தனைத் திறனையும் பாதிக்கின்றன. மேலும், ஒரு மனிதர் நடந்து கொள்ளும் நிலையில் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக் கூடிய அளவிலான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இது மூளை சுருங்குவதால் ஏற்படக் கூடிய மிக மோசமான பாதிப்புகளில் ஒன்றாகும்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லக் கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது மன அழுத்தமாகும். எனவே அதனை முறையாக கவனித்து, நிர்வகிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். மன அழுத்தம் உங்களுடைய மூளை செல்களைக் கொன்று விடும், குறிப்பாக நினைவாற்றல் மற்றும் கற்றல் தொடர்பான செல்களை கொன்று விடும் என்பது ஒரு புதிய ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும். எனவே, மன அழுத்தத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகமான உணவு

அதிகமான உணவு

உலகம் முழுவதிலும் 10 லட்சம் பேருக்கும் மேலாக கொன்று விட்ட அரக்கனாக இருப்பது அதிகமான உணவு உண்பதால் ஏற்படும் உடல் பருமன் என்ற பிரச்சனை தான். அதிகமான உடல் பருமனுடன் இருப்பதன் மூலமாக உங்களுடைய இதயம் மட்டுமல்லாமல், மூளையையும் சேர்த்து தான் நீங்கள் அழிக்கிறீர்கள். யாரெல்லாம் குறைவான உணவையோ அல்லது தேவையான அளவிலான உணவையோ சாப்பிடுகிறார்களோ, அவர்களுக்கு பர்கின்சன் நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

சிகரெட்

சிகரெட்

'புகைப் பழக்கம் ஆளைக் கொல்லும்' என்று யாரும் சும்மா சொல்வதில்லை! இது உண்மை தான். புகைப்பழக்கம் உண்மையில் உங்களுடைய நுரையீரலை மட்டுமல்லாமல், மூளையையும் கொன்றுவிடுகிறது. தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதன் மூலமாக மூளையுடைய முக்கியமான திசுக்கள் மெல்லியாதாக தேய்ந்து விடுவதாகவும், இதன் மூலம் மூளையின் அளவு காலப்போக்கில் குறைந்து விடுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lifestyle Habits That Shrink Your Brain

Why does the brain shrink, do you have any idea? Here are some of the lifestyle habits that make the brain shrink. You must take a look at them.
Story first published: Tuesday, March 8, 2016, 9:32 [IST]
Desktop Bottom Promotion