ஜான்சன் & ஜான்சன் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உண்மையா?

By: Aruna Saravanan
Subscribe to Boldsky

உலகின் மிக புகழ்பெற்ற ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளால் அலபாமா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான பெண் ஒருவர் அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

அவர் 50 ஆண்டு காலமாக ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பான பேபி பவுடர் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தி உள்ளார். அவரின் இந்த நிலைமைக்கு காரணம் அந்த தயாரிப்புகளின் பயன்பாடு தான் என்று அவர் மகன் கூறியுள்ளார்.

சமீபத்தில் புதிய ஜெர்ஸியை சேர்ந்த இந்த குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் கம்பனிக்கு சுகாதார மற்றும் நுகர்வோர் குழுக்கள் தடை விதித்திருந்தனர்.

மூன்று வருட மனுக்கள் மற்றும் எதிர்மறை விளம்பரம், புறக்கணிப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை தொடர்ந்து, இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டு ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பில் உள்ள புற்றுநோய்க்கு காரணமாக இருக்கக்கூடிய 1,4-டைஆக்ஸேன் மற்றும் பார்மால்டிஹைடு கூறுகளை நீக்குவதாக அறிவித்தது.

ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை உங்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை வழங்க உள்ளது. இவை உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இதை படித்து தெளிவு அடையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டால்க் என்றால் என்ன?

டால்க் என்றால் என்ன?

பவுடர் என்பது ஒரு கனிமம் , மண்ணில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டது மற்றும் இது மெக்னீசியம் , சிலிக்கான் , ஆக்சிஜன் , ஹைட்ரஜனும் போன்றவைகளால் செய்யப்படுகின்றது என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வாசனையுள்ள பவுடர் பொதுவாக அழகு பராமரிப்பு பொருட்கள் மற்றும் தோலின் ஈரப்பதத்தை உறிஞ்சவும் பயன்படுத்தப்படுகிறது .

டால்கில் உள்ள முக்கிய மூலப்பொருட்கள் எவை?

டால்கில் உள்ள முக்கிய மூலப்பொருட்கள் எவை?

கடந்த ஆண்டுகளில் ( 1970 ) பவுடரில் கல்நார் கொண்டிருந்தது. ஆனால் நவீன பவுடரில் இது இல்லை மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆய்வின் படி, பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் தோன்ற இந்த கல்நார் மிக பெரிய பங்கை வகித்திருக்கும் என்று கூறுகின்றனர்.

கருப்பை புற்றுநோயிக்கான மற்ற காரணங்கள் என்ன?

கருப்பை புற்றுநோயிக்கான மற்ற காரணங்கள் என்ன?

வயது, பாரம்பரியம், இனப்பெருக்க பிரச்சனை மற்றும் குடும்பக்கட்டுபாடு போன்றவைகளாலும் இந்த கருப்பை பிரச்சனை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புக்கும் புற்று நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புக்கும் புற்று நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

ஆய்வுகள் சில பவுடர் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது என்று கூறுகின்றன. ஆனால் இந்த மென்மையான குழந்தை பொருட்களால் புற்றுநோயை கொண்டு வர முடியுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தெரியுமா?

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தெரியுமா?

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் சில: இடுப்பு பகுதியில் துரிதமான எடை இழப்பு , வயிற்று வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம், குடல் பழக்கங்களில் மாற்றங்கள் போன்றவை ஆகும்.

கருப்பை புற்றுநோயை கண்டுபிடுப்பது எப்படி?

கருப்பை புற்றுநோயை கண்டுபிடுப்பது எப்படி?

மருத்துவர் முதலில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை பரிசோதனை செய்வார். பெல்விக் சோதனையில் கருப்பை வீங்கி உள்ளதா என்பதை சோதனை செய்வார்கள். வயிற்றில் திரவம் இருக்கும் அறிகுறி இருந்தால் கொடிய நோயான புற்றுநோய் இருக்கின்றது என்று தெளிவுப்படுத்துவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Johnson & Johnson Causes Ovarian Cancer?

Can Johnson & Johnson Products Kill You? Reports state that a woman battled ovarian cancer after using Johnson & Johnson baby products, is it true?
Story first published: Sunday, March 6, 2016, 9:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter