எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகிலேயே மிகச்சிறந்தது உண்ணும் உணவுப் பொருட்கள் தான். அத்தகைய உணவுப் பொருட்கள் சில நேரங்களில் நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மையில் அந்த உணவுப் பொருட்களால் அசௌகரியம் ஏற்படுவதில்லை.

உயிருக்கு உலை வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகள்!!!

தவறான உணவு சேர்க்கைகளால் தான் அந்த தவறுகள் நேரிடுகிறது. எனவே ஒவ்வொருவரும் எந்த உணவுப்பொருளுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள்!!!

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை எந்த உணவுப் பொருளுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று ஒருசில தவறான உணவு சேர்க்கைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, இனிமேல் அவற்றைப் பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

முட்டை மற்றும் பால்

முட்டை மற்றும் பால்

இந்த உணவுச் சேர்க்கை உடல் எடையை அதிகரிக்கும் என்று எடையை அதிகரிக்க நினைக்கும் பலர் இதை சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும் நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும். மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.

வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

மீன் மற்றும் பால்

மீன் மற்றும் பால்

மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால், அதனால் உடலில் உள்ள இரத்த பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food Combinations That Can Make You Very Sick

Sometime food can cause severe discomfort to you. That's not fault of food. There are some combinations which one should not try. Here are some of them. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter