Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
அழுகை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!
அழுகை, மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்களுக்கு மத்தியிலும் கூட உணர்ச்சி ரீதியான மாற்றத்தின் போது உண்டாகும் ஒரு இயற்கை செயல். நாம் மனதளவில் சோர்வடையும் போது, துக்கம் தொண்டையை அடைக்கும் போது மட்டுமா அழுகிறோம்? இல்லை, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது, ஏன் வெங்காயம் நறுக்கும் போது கூட தான் அழுகிறோம்.
அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா??
அழுகையிலும் கூட சில வகைகள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஆண், பெண் மத்தியில் அழுகையில் காணப்படும் வேறுபாடுகள், ஏன் பெண்கள் ஆண்களை காட்டிலும் அதிகம் அழுகிறார்கள் என்பது பற்றி இனி காண்போம்...

அழுகையில் வேறுபாடுகள்
நீங்கள் ஒவ்வொரு முறை கண் இமைக்கும் போதும் கண்களில் திரவம் உண்டாகிறது. இதை பாசல் டியர்ஸ் என கூறுகின்றனர். இது உங்கள் கண்களை பாதுகாக்கவல்லது. மற்றும் வெங்காயம் நறுக்கும் போது வெளிவருவது எரிச்சலினால் உண்டாகும் கண்ணீர். மற்றும் மூன்றாவதாக பிரிவு, உணர்வு ரீதியாக உண்டாகும் கண்ணீர் ஆகும்.

அழுகையில் வேறுபாடுகள்
இந்த மூன்று வகையான கண்ணீரிலும் உப்பு, புரதம், ஹார்மோன்ஸ் மற்றும் வேறு சிலவற்றின் கலப்பும் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆண், பெண் கண்ணீர்
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர். மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.

ஆண், பெண் கண்ணீர்
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

நாடகம்
ஆண்கள், பெண்கள் அழுவதை நாடகக்காரி என நக்கலுக்கு கூறலாம். ஆனால், உண்மையில் இது பெண்களின் இயற்கை குணாதிசயம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாளங்கள்
ஆண்களை காட்டிலும் பெண்களின் கண்ணீர் வெளிவரும் நாளங்கள் சிறியது ஆகும். இதனால் ஒரே அளவு ஆண், பெண் அழுதாலும் கூட, பெண்களுக்கு உடனே கண்ணீர் வெளிவருகிறது ஆனால், ஆண்களுக்கு நாளங்களிலேயே தேங்கி நின்றுவிடுகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆணின் மனநிலை
பெண் அழுத நொடியில் ஆண்களின் மனநிலை மாறிவிடுகிறது. மேலும், பெண்கள் அழும் போது தாம்பத்தியத்தில் ஈடுபடும் எண்ணங்கள் கூட மாறிவிடும். கோபம், மகிழ்ச்சி, என எதுவாக இருந்தாலும் அந்த மனநிலை ஆண்களுக்கு மாறிவிடுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இறுக்கம்
தம்பதி மத்தியில் யாரேனும் ஒருவர் அழுதுவிட்டாலும் கூட அவர்கள் மத்தியிலான இணக்கம், இறுக்கம் அதிகரித்துவிடுகிறது. இருவரும் மிக நெருக்கமாகிவிடுகிறார்கள். மனதளவில் மட்டுமின்றி, ஹார்மோன்களும் கூட தன்னிலை மாறி இணைப்பை அதிகரிக்க தூண்டுகிறதாம்.

மூக்கில் ஒழுகுவது ஏன்?
எப்படி நீர் குழாயில் வேகமாக நீர் வரும்போது ஓட்டை இருக்கும் வழியில் எல்லாம் தண்ணீர் வெளிவருகிறதோ அப்படி தான் இதிலும். அதிகமாக ஒருவர் அழும் போது வெளிவரும் கண்ணீரின் வேகத்தின் காரணமாக மூக்கிலும் கூட நீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.

மூக்கில் ஒழுகுவது ஏன்?
இதற்கு முக்கிய காரணம் நமது மண்டை ஓட்டின் வடிவமைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரிக்கும் போது தான் பெரும்பாலும் கண்ணீர் அதிகமாக வெளிவருகிறது.



Click it and Unblock the Notifications
