For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் குறித்த இந்த தகவல்களை நீங்கள் அறிவீர்களா?

By Ranjithkumar Rathenkumar
|

பீரியட்ஸ் அல்லது மென்சஸ் (மாதவிடாய்) என்ற வார்த்தையை முதலில் கேட்கும் போது நமக்கு ஒரு அசௌகரியமான மன நிலையே ஏற்படும். சில பெண்களுக்கு அது மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும், பல பெண்கள் அந்த சமயத்தில் சிரமப்படுவதோடு தனிமையில் ஒடுங்குகின்றனர்.

மாதவிடாய் சமயங்களில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆண்கள் ஆர்வமாய் இருப்பார்கள். அதே சமயம் அவர்கள் பெண்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். மாதவிடாய் குறித்த ஆய்வுகளில் ஒன்று, மாதவிடாய் காலங்களில் பெண்களின் டெஸ்டோஸ்ட்ரோன் அளவு அதிகமாவதால் அவர்கள் ஆண் தன்மையுடன் காணப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது. எனினும் இதனால் பெண்கள் ஆண்களைப் போல செயல்பட ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

எடை குறைவதில் தொடங்கி மனநிலையில் மாறுபாடுகள் காரணமாக அசாதாரணமாக செயல்படுவது வரை பல குணாதிசயங்கள் மாதவிடாய் காலத்திற்கே உரித்தானவை. இந்த தகவல்கள் பொதுவாக வெளிப்படையாக விவாதிக்கப் படாததால், பெண்களுக்கு தங்கள் உடலின் செயல்பாடுகள் குறித்து ஏன் சரிவர தெரிவதில்லை என்ற குழப்பம் ஏற்படுகிறது.

மாதவிடாய் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. உங்களது மாதவிடாய் காலத்தைப் பற்றி அதிகம் அறிந்திராத பல ஆர்வத்தை ஈர்க்கும் தகவல்களை நாங்கள் பகிர்ந்துள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் உங்கள் மனதை எழுச்சியடையச் செய்கிறது

மாதவிடாய் உங்கள் மனதை எழுச்சியடையச் செய்கிறது

இந்த சமயத்தில் பெண்ணின் உடலில் குறைந்த அளவு புரோஜெஸ்டிரோன் சுரப்பதால், இது பாலுணர்வை மட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இது பெண்களை சிறிதளவு கட்டில் சுகத்திற்கு ஏங்கச் செய்கிறது. மாதவிடாய் பற்றி பலரும் அறிந்திராத தகவல்களில் இதுவும் ஒன்று.

வீணாகும் இரத்தத்தின் அளவு குறைவே

வீணாகும் இரத்தத்தின் அளவு குறைவே

பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், இரத்தப் போக்கின் அளவு இரண்டு தேக்கரண்டி அளவே என்பது தான். இது இரத்தம் உறைவதையும் உள்ளடக்கியதே.

டேம்பான் (Tampons) உபயோகிப்பதால் கன்னித்தன்மை பாதிக்கப்படுவதில்லை

டேம்பான் (Tampons) உபயோகிப்பதால் கன்னித்தன்மை பாதிக்கப்படுவதில்லை

பெண்கள் பாதுகாப்பாக டேம்பான் உபயோகிக்கலாம். இதனால் கன்னித் திரை கிழிவதோ அல்லது பாதிக்கப்படுவதோ இல்லை. ஒரு பெண் தனது கன்னித் தன்மையை இழப்பது ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளும் போது மட்டுமே.

மாதவிடாய் பன்னிரண்டு வயதிலேயே தொடங்குகிறது

மாதவிடாய் பன்னிரண்டு வயதிலேயே தொடங்குகிறது

பெண்கள் தங்கள் பதின் பருவங்களில் பூப்படையும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள் தங்களது பன்னிரெண்டாவது வயதிலேயே மாதவிடாய் பெறத் துவங்குகிறார்கள். இந்த மாதாந்திர சுழற்சி ஐம்பது வயது வரை தொடர்கிறது.

மாதவிடாய் உங்கள் குரலை மாற்றுகிறது

மாதவிடாய் உங்கள் குரலை மாற்றுகிறது

மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களின் குரல் மாற்றத்தை ஆண்களால் அறிய முடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சாதாரணமாக உள்ளதை விட மாதவிடாய் காலத்தில் பெண்களின் குரல் கொஞ்சம் கொடூரமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மாதவிடாய் காலத்திலும் கருத்தரிக்கலாம்

மாதவிடாய் காலத்திலும் கருத்தரிக்கலாம்

இது அசாதாரணமான சம்பவம் தான். ஆபத்தானதும் கூட. விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்புக்குள் குறைந்தது ஒரு வார காலம் உயிருடன் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். மாதவிடாய் காலத்தின் கடைசியில் உடலுறவு கொள்ளும் போது இதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மாதவிடாய்க்கு முந்திய காலம் கர்ப்ப காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்

மாதவிடாய்க்கு முந்திய காலம் கர்ப்ப காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்

பெண்ணின் உடல் கர்ப்ப காலத்தினை ஒத்த அறிகுறிகளை மாதவிடாய் காலத்தில் பிரதிபலிக்கும். மார்பகங்கள் மென்மையாதல், வீக்கம், திரவம் உடலில் தேங்குதல் முதலான அறிகுறிகள் காணப்படும்.

தாங்கள் மேலும் ஏதாவது பரிந்துரைக்க விரும்பினால், கீழே உள்ள கருத்துகளுக்கான பிரிவில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Know These Period Facts?

In this article today, read on to know more about the various facts about periods. Read on to know more about the facts about your periods.
Story first published: Saturday, January 30, 2016, 16:48 [IST]
Desktop Bottom Promotion