For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இரவு உணவுடன் 1 கிளாஸ் ஒயின் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!

|

ஒயினை விரும்பி பருகும் நபர்களுக்கு இதுவொரு நற்செய்தி. ஆம், இரவு உணவருந்தும் போது, அத்துடன் ஒரு கிளாஸ் ஒயினை சிப் செய்து குடிப்பது உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துகிறது என லண்டனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dine With Wine For Good Health

ஹெல்சின்கி மற்றும் டேம்பீர் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில், 19 - 69 வயதுக்குட்பட்ட ஒயின் குடிக்கும் பழக்கமுடைய 2,600 பேர் கலந்துக் கொண்டனர். இதில் இரவு உணவருந்தும் போது 1 - 2 கிளாஸ் ஒயின் குடிக்கும் நபர்கள் மத்தியில் உடல்நலம் மேம்பட்டு காணப்படுவது அறியப்பட்டது.

உடல் வலிமை மற்றும் மன வலிமை இரண்டிலுமே இவர்கள் மேம்பட்டு காணப்படுகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் மத்தியில் சுயமரியாதை அளவு அதிகமாக இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

மேலும், இந்த ஆய்வறிக்கையின் முடிவில், தினமும் இரவு உணவருந்தும் போது சிறிதளவு ஒயின் பருகுபவர்கள் மத்தியில் உடல்நல அபாயங்கள் ஏதும் இல்லை என்றும். இது உடல்நலத்தை ஊக்குவிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கை விரிவாக ஆல்கஹால் மற்றும் ஆல்கஹாலிசம் எனும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

English summary

Dine With Wine For Good Health

A recent study says, Dine With Wine For Good Health, take a look.
Desktop Bottom Promotion