For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுக்கு நன்மை மற்றும் தீங்கு விளைவிக்கும் கலோரிகள்: வேறுபாடு

|

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் கலோரிகள் தான். ஆனால், எந்த வகையிலான கலோரிகள் என்பது தான் இங்கு கேள்வியே. ஏனெனில், சர்க்கரையிலும் கலோரி இருக்கிறது பழங்களிலும் கலோரிகள் இருக்கிறது. பாலிலும், பீரிலும் என அனைத்திலும் தான் கலோரிகள் இருக்கின்றன.

உங்க இரத்தம் எவ்வாளவு அசுத்தமா இருக்குன்னு தெரியுமா? அத சுத்தம் செய்ய வேண்டாமா?

இதில் நமக்கு தேவையான கலோரிகள் எது, நல்லது எது? கெட்டது எது என கண்டறிய வேண்டியது அவசியம். நாள் முழுக்க உழைக்க நமது உடலுக்கு கலோரிகள் தேவை அதற்காக விஷத்தை அள்ளி பருக முடியாது அல்லவா.

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

சில உணவுகளில் இருந்து பெறப்படும் கலோரிகள் மூலமாக தான் உடல் எடையும், நீரிழிவு பாதிப்பும் அதிகரித்து வருகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்ப்ஸ்

கார்ப்ஸ்

கார்ப்ஸ் உணவுகள் மட்டுமே உடல் எடை மற்றும் கொழுப்பு அதிகரிக்க காரணம் அல்ல. இதை நம் மூதாதையர் இடத்தில் இருந்தே நாம் கற்றுக் கொள்ளலாம். ஏனெனில், அவர்களும் தான் அரிசி உணவு சாப்பிட்டார்கள். ஆனால், நம் அளவு அவர்கள் உடல்நல குறைபாடு அடையவில்லையே. ஏனெனில், கலோரிகளில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உள்ளன.

கெட்ட கலோரி உணவுகள்

கெட்ட கலோரி உணவுகள்

செயற்கை இனிப்பூட்டிகள் கலப்புள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிப்பு செய்யப்பட்ட கார்ப்ஸ் உணவுகள், பீர் போன்றவை கெட்ட கலோரிகள் உள்ள உணவுகள். இவை தான் உடல் எடை அதிகரிக்கவும், நீரிழிவு நோய் தாக்கம் ஏற்படவும் காரணியாக இருக்கின்றன.

நிறைய கார்ப்ஸ் உணவு

நிறைய கார்ப்ஸ் உணவு

எவ்வளவு அதிகம் நீங்கள் கார்ப்ஸ் உணவுகள் உட்கொள்கிறீர்களோ அவ்வளவு உடல் எடை கொழுப்பாக உடலில் சேர்ந்து அதிகரிக்கும்.

இனிப்பூட்டிகள்

இனிப்பூட்டிகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட இனிப்பூட்டிகள் மற்றும் வெள்ளை சர்க்கரை. டீ, காபியில் ஆரம்பித்து, ஜூஸ், சோடா பானம் வரை இவற்றை தான் கலந்து நாம் பருகி வருகிறோம். இவை உடல் நலத்தை பாதிக்கக் கூடிய கெட்ட கலோரிகள் ஆகும்.

சோடா பானங்கள்

சோடா பானங்கள்

சர்க்கரை கலப்புள்ள சோடா பானங்கள் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கலோரிகள்

கலோரிகள்

நாள் முழுக்க வேலை செய்ய வேண்டும் எனில் உடலுக்கு கலோரிகள் தேவை. அதற்காக ஒரு கரண்டி சர்க்கரை தினமும் சாப்பிட்டு வந்தால் உயிர் போய்விடும். கலோரிகளுடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின் சத்துக்களும் தேவை.

சுரப்பிகள்

சுரப்பிகள்

நாம் உட்கொள்ளும் சில தீய கலோரிகள் மூலமாக அதிகரிக்கும் கொழுப்பு உடலில் பசியைக் கட்டுப்படுத்தும் லெப்டின் எனும் சுரப்பியை சேதப்படுத்துகிறது. இதனால், பசியின் அளவு மாறி, உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சிறந்த உணவுகள்

சிறந்த உணவுகள்

கலோரிகளுடன் நல்ல சத்தான உணவுகளும் தேவை. தானிய உணவுகள், பயிறு வகை உணவுகள், காய்கறி, பழங்கள், மீன், முட்டை, இறைச்சி என அனைத்தும் கலந்த உணவுமுறை தான் உடலுக்கு முழு வலிமையையும் அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Difference Between Healthy And Unhealthy Calories?

Take a look on Difference Between Healthy And Unhealthy Calories, read here in tamil.
Story first published: Monday, February 15, 2016, 16:43 [IST]
Desktop Bottom Promotion