Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆப்ரேஷன் செய்ய, செய்ய நர்சுடன் கெட்ட ஆட்டம் போட்ட டாக்டர் - வீடியோ!
மருத்துவர்கள் தான் கண் முன் நடமாடும் உயிருள்ள கடவுள்கள் என உலக மக்கள் கூறுகிறார்கள். தாய் கொடுத்த உயிரை நோய் அண்டாமால் காக்கும் கடவுள்கள் தான் மருத்துவர்கள். ஆனால், அந்த ஒருசில சமயங்களில், ஒருசில சம்பவங்களில் ஈடுபடும் மருத்துவர்களால், அந்த துறைக்கே அவப்பெயர் ஏற்பட்டுவிடுகிறது.
மருத்துவம் இன்றைய உலகின் மிகப்பெரிய வர்த்தகம் செய்ய சிறந்த இண்டஸ்ட்ரியாக தான் பார்க்கப்படுகிறது.ஏற்கனவே பிணத்திடமும் பணம் பிடுங்கும் துறை என கூறப்பட்டுக் கொண்டிருக்க, கொலம்பியாவை சேர்ந்த ஒரு மருத்துவர் வேற லெவலில் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்...

பிளாஸ்டிக் சர்ஜன்!
கொலம்பியாவை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜன் ஒருவர் ஆபரேஷன் செய்ய, செய்ய, தனது நர்சுடன் சேர்ந்து பாடல் ஒன்றுக்கு கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு மீண்டும் ஆப்ரேஷனை தொடர்ந்து, அதை வீடியோ பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்த சம்பவம் பலதரப்பட்ட மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
Image Source

டேவிட் மாஜனா - ஆஞ்சலிகா!
வீடியோவில் தோன்றி இருப்பவர் கொலம்பியாவை சேர்ந்த மருத்துவர் டேவிட் மாஜனா, மற்றும் இவருடன் கெட்ட ஆட்டம் போட்ட அந்த நர்ஸ் ஆஞ்சலிகா.
Image Source

சிட்டி கவுன்சிலர்!
இந்த காணொளியை கண்ட சிட்டி கவுன்சிலர் பெர்னார்டோ அலெஜான்ட்ரோ குயிரா, இது நெறிமுறையற்ற சம்பவம் எண்டும், நோயாளிகளை மதிக்க மருத்துவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவுத்துள்ளார்.
Image Source

மருத்துவர் மீது புகார்கள்!
ஏற்கனவே, இந்த மருத்துவர் மீது ஒரு நோயாளி புகார் அளித்துள்ளார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 42 வயது மிக்க நபர் ஒருவரது இறப்புக்கு மாஜனாவின் மருத்துவம் தான் காரணம் என அவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source

பெண் நோயாளி!
மாஜனாவிடம் மார்பக சிகிச்சை மேற்கொண்ட பெண் பேஷேன்ட் ஒருவர் இவரிடம் சிகிச்சை பெற்ற சில நாட்களிலேயே அசௌகரியங்கள் பல உணர்ததாக இந்த வீடியோ பதிவை கண்ட பின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Image Source

மருத்துவர் கருத்து!
நெட்டிசன்கள் உட்பட பல்வேறு நபர்கள் இவரது இந்த செய்கையை கண்டு கொந்தளிக்க, மருத்துவர் மாஜனா, தான் தனது வேலையை இஞ்சாய் செய்து செய்வதாக கூலாக பதில் கூறியுள்ளார்.
இதை வேடிக்கைகாக, விளையாட்டாக செய்த ஒன்று தான். இது உண்மையாக நோயாளியுடன் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை மாஜனாவுடன் பணிபுரியும் நபர் தான் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டாக இருப்பினும், ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர் இப்படி நடந்துக் கொள்வது நெறிமுறைக்கு உட்பட்டது அல்ல என சக மருத்துவர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
Image Source
வீடியோ!
ஆப்ரேஷன் செய்ய, செய்ய நர்சுடன் கெட்ட ஆட்டம் போட்ட டாக்டர்-ன் வீடியோ பதிவு...



Click it and Unblock the Notifications
