Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நாள்பட்ட ஒற்றை தலைவலியா? இந்த யோகாவை பண்ணுங்க -தினம் ஒரு யோகா
சேது பந்த சர்வாங்காசனா :
"சேது" என்றால் பாலம், "பந்த" என்றால் இணைப்பு, "சர்வம்" என்றால் அனைத்து "அங்க" என்றால் உறுப்பு. இந்த யோகாவில் அனைத்து உறுப்புகளும் பயன் பெறுகிறது. இந்த யோகா பாலம் போன்ற நிலையில் செய்யப்படுவதால், சேது பந்த சர்வாங்காசனா என்று கூறப்படுகிறது.
நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீரென்றால், அல்லது ஒற்றை தலைவலி உங்களுக்கு இருக்கிறதென்றால் இந்த யோகாவை செய்து பாருங்கள். குணம் கிடைக்கும்.

யோகா எல்லா வித நோய்களையும் குணப்படுத்தும். வியாதி வர விடாமலும் தடுக்கிறது. ஆகவே யோகாவை கற்றுக் கொண்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழலாம். இன்று இந்த யோகாவை கற்றுக் கொள்ளுங்கள்.
செய்முறை :
முதலில் தரையில் கால் நீட்டிப் படுங்கள். பின்னர் கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றிய நிலையில் வைக்க வேண்டும்.
உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வையுங்கள். கைகளை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும்.
இப்போது இடுப்பை மேலே உயர்த்துங்கள். மெல்ல முதுகையும் உயர்த்துங்கள்.
இடுப்பினை கைகளால் தாங்கும்படி பிடித்துக் கொள்ளுங்கள்.இப்போது தலை, கழுத்து, தோள் பட்டை வரைக்குமே தரையில் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சை விடும்போது மீண்டும் தரையில் உடலை கிடத்துங்கள்.
இப்போது ரிலாக்ஸ் ஆகுங்கள். இது போல் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு : இதனை கர்ப்பிணிகள், முதுகுவலி, கழுத்து வலி உள்ளவரகள் செய்யக் கூடாது
பலன்கள் :
இந்த யோகாவை செய்யும்போது மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்கும். முதுகிற்கும், இடுப்பிற்கும் வலிமையை தரும். இரத்த ஓட்டம் தலைக்கும் அதைகமாக பாயும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


