Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முதுகு மற்றும் இடுப்பு வலியை குறைக்கும் ஆனந்த பாலாசனா !!
முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சரியான உணவு, உடற்பயிற்சி, இல்லாததே முதன்மையான காரணம். அதன்பின் நாள் முழுவதும் அமர்ந்து கொண்டேயிருப்பதும் , சரியான முறையில் தூங்காமலிருப்பதும் காரணங்களாகும்.
இதற்கு மிக எளிதான தீர்வாக ஒரு வலியை குறைக்கும் மருந்தை வாங்கி விழுங்கவதோடு முடிந்துவிட்டது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அவற்றின் வீரியமும், பக்க விளைவும் உங்கள் உடலை மிகவும் பாதிக்கும். இதனை மாத்திரையில் பிரச்சனைகளை விலைக்கு வாங்காமல், வேறுவிதமாக தீர்வு காண முயலுங்கள்.

உடற்பயிற்சி செய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அவ்வப்போது நடப்பது என முயற்சிக்க வேண்டும். இன்னும் எளிமையான ஒன்று யோகா செய்யுங்கள். யோகாவினால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
ஆனந்த பாலாசனா!
ஆனந்த என்றால் சந்தோஷமான, பால என்றால் குழந்தை, ஆறு மாதக் குழந்தை கால் விரல்களை எடுத்து கைகளில் பிடித்துக் கொள்வது போல செய்யப்படும் இந்த யோகாவிற்கு ஆனந்த பாலாசனா என்று பெயர் வந்துள்ளது.
செய்முறை :
முதலில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டபின் தரையில் படுங்கள். முதுகு தரையோடு இருக்கும்படி படுங்கள்.
பின்னர் கால்களை மேல் நோக்கி நீட்டவும். இரு முட்டிகளும் சேர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக காலை வளைத்து, கால் கட்டை விரலை கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஆழ்ந்து மூச்சை விட வேண்டும். இதே நிலையில் 20- 30 நொடிகள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இதுபோல் 4 தடவை செய்யுங்கள்.
பலன்கள் :
அடிவயிற்றில் தசைகளை சுருங்கச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிறு நீரகம், வயிறு ஆகியவை பலம் பெறும். மன அழுத்தம் குறையும். இடுப்பு வலி குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

