கேண்டைடா தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றும் 11 உணவுகள் இவை !!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

நாம் உட்கொள்ளும் உணவுகள், செரிமான உறுப்புகளால் செரிக்கப்பட்டு, சக்தியாக மாற்றப்படுகின்றது. செரிமான மண்டலத்தை கவனமாக பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் அதி முக்கிய கடமையாகும். ஏனெனில் செரிமான மண்டலத்தை பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கேண்டிடா ஆகும்.

எவ்வாறு உடலில் ஊடுருவும் :

கேண்டைடா, வழக்கமாக குடலில் உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் போன்றவற்றை கையாளுகின்றது. இதனுடைய அதி தீவிர வளர்ச்சி குடல் சுவரில் ஓட்டைகளை உருவாக்குகின்றது. அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. ஏனெனில் குடல் ஓட்டை வழியே நச்சுப் பொருட்கள் வெளியேறி இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகின்றது.

கல்லீரலுக்கு பாதிப்பு :

கேண்டைடாவின் அதிதீவிர வளர்ச்சியின் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுகின்றது. இதனால் இரத்த சர்க்கரை அளவு மாறுபாடு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஹார்மோன்கள் கட்டுப்பாடு, முதலியன பாதிக்கப்படுகின்றது.

11 foods to fight candida overgrowth

கேண்டைடாவின் அதி தீவிர வளர்ச்சிக்கான காரணங்கள்:

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு மற்றும் சக்கரையை உட்கொள்வதனால், அதிக மன அழுத்தம், நல்ல பாக்டீரியாவை அழிக்கும் மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, அதிகமாக மது அருந்துவது

கேண்டைடாவின் அறிகுறிகள் :

தோல் மற்றும் நகங்களில் நோய் தொற்றுக்கள், அழுத்தத்தை உணர்வது, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்சனை, பிறப்புறுப்பு சார்ந்த நோய்த்தொற்றுகள், அரிப்பு, இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட ஆசைப்படுவது மன அழுத்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

1. தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் உள்ள எதிர்பூஞ்சை காரணியான கேப்ரிலிச் அமிலம் ஈஸ்ட் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றது. எனவே தேங்காய் எண்ணெய் கேண்டிடா வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

2. எலுமிச்சை:

எலுமிச்சையில் உள்ள எதிர்பூஞ்சை பண்புகள் கல்லீரலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி கேண்டிடா வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

3. இலவங்கப்பட்டை:

இது கேப்ரிலிச் அமிலத்தை ஒத்த விளைவை கொண்டிருக்கிறது. வீக்கத்தை குறைக்க உதவும் இலவங்கப்பட்டையில் உள்ள எதிர்பூஞ்சை பண்புகள் கேண்டிடா வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

4. பூண்டு:

இதில் கந்தகம் அதிகம் உள்ள அல்லிசின் என்கிற எதிர் பூஞ்சை காரணி உள்ளது. அதன் காரணமாக பூண்டு கேண்டிடா வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

5. இலை காய்கறிகள்:

ப்ரோக்கோலி, அருகுலா, முட்டைக்கோஸ், போன்ற பல்வேறு வகையான இலை காய்கறிகள் கேண்டிடா வளர்ச்சி தடுத்து நிறுத்த உதவுகின்றது. இவற்றில் உள்ள ஐஸோதயோசைனேட் கேண்டிடா பிரச்சனையை சரி செய்கின்றது.

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

6. ஆலிவ் ஆயில்:

ஆலிவ் எண்ணெய்யில் உள்ள பாலிபினால்களில் கேண்டிடாவை எதிர்த்துப் போராட நம் உடலை சித்தப்படுத்துகின்றது.

 7. ஆப்பிள் சாறு வினிகர்:

7. ஆப்பிள் சாறு வினிகர்:

இதில் உள்ள என்சைம்கள் ஒரு சரியான-கேண்டிடா எதிர்ப்பு முகவராக செயல்படுகின்றது. எனவே ஆப்பிள் சாறு வினிகர் கேண்டிடா வளர்ச்சியை தடுக்கின்றது.

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

கேண்டைடா தொற்றிலிருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் :

8. இஞ்சி:

இஞ்சி ஒரு வீக்கம் குறைக்கும் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு உணவாக பயன்படுகின்றது. எனவே இது நம்முடைய உடல், தன்னுடைய நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பொழுது, உடலின் நச்சு வெளியேற்றும் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது.

9. கிராம்பு:

9. கிராம்பு:

உடலுக்கு மிகவும் தேவையான யூஜினால் என்கிற எண்ணெயி கிராம்பில் உள்ளது. இந்த எண்ணெய் கேண்டிடா வளர்ச்சியை தடுக்க பெரிதும் பயன்படுகின்றது.

10. மீன்:

10. மீன்:

மீனில் உள்ள ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள், பூஞ்சை தொற்றை எதிர்த்து போராட பயன்படுகின்றது.

11. நட்ஸ் :

11. நட்ஸ் :

அதிகமான உலர்கொட்டைகள், விதைகள், குறைவான புரோட்டீன், காய்கறிகள் மற்றும் ஸ்டீவியா போன்ற முழுமையான உணவு கேண்டிடா வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.

இத்தகைய உணவை உட்கொள்ளும் பொழுது நாம் மிகவும் குறைவாக சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவையும் குறைக்க வேண்டும். இவை இரண்டும் மிக முக்கியமானது. .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

11 foods to fight candida overgrowth

11 Foods to protect yourself from candida fungal infection
Story first published: Friday, November 25, 2016, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter