For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுமையை தடுத்து, வாழ்நாளை இரட்டிப்பாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது!

|

நம் அனைவருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது மனிதர்களின் இயல்பும் கூட. அதே போல தான் மரணமும், வாழ்க்கையை நொந்துக்கொண்டு இருப்பவர்களும் கூட மரணத்தை வேண்ட மாட்டார்கள், துயரங்கள் அவர்களது தொண்டையை அடைக்கும் வரை.

சென்ற நூற்றாண்டு வரை மனிதர்களின் வாழ்நாள் என்பது 100 வயது என்று தான் இருந்தது. ஆனால், கடந்த 50 வருடத்தில் நாம் கண்ட பெரும் வளர்ச்சி, நமது வாழ்நாளை குறைத்துவிட்டது. இப்போது மீண்டும், அதே அறிவியல் வளர்ச்சியின் மூலம், உயிரினத்தின் வாழ்நாளை அதிகரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள ஓர் மருந்து, மனிதர்களின் வாழ்நாளை இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
60 அல்ல, இனிமேல் 120

60 அல்ல, இனிமேல் 120

ஒரு காலத்தில் மனிதர்களின் வாழ்நாள் குறைந்தபட்சம் 100 வயது என்று இருந்தது. நமது வாழ்வியல் மாற்றத்தின் காரணமாக அது மெல்ல மெல்ல குறைந்து, இப்போது 60-ல் நிற்கிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புது மருந்தின் (Drug) உதவினால் இதை 120க்கு உயர்த்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மெட்ஃபார்மின் (Metformin)

மெட்ஃபார்மின் (Metformin)

முதுமையை குறைக்க, உடலில் உள்ள செல்களின் முதிர்ச்சியடையும் வேகத்தை குறைத்து பயன்தர புதியதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து தான் இந்த மெட்ஃபார்மின். இன்னமும் இந்த மருந்து சந்தைக்கு வரவில்லை. ஆய்வாளர்கள் விலகுங்குகளின் மீது பரிசோதித்து நேர்மறை பலன்களை கண்டுள்ளதால், அடுத்து மனிதர்களை வைத்து பரிசோதனை செய்துவிட்டு சந்தையில் வெளியிடலாம் என காத்திருக்கிறார்கள்.

உடல் மற்றும் மனம்

உடல் மற்றும் மனம்

இந்த மெட்ஃபார்மின் மூலம், மனம் மற்றும் உடல் இரண்டு வகையிலும் வாழ்நாளை நீட்டிக்க பயன்தரும் வண்ணம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, மேற்கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இதனால் அனைவரும் வியக்கம் படி, மனிதர்களின் வாழ்நாள் ஏறத்தாழ 120-தை எட்டும் என்ற நம்பிக்கையில் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

செல்களில் பரிசோதனை

செல்களில் பரிசோதனை

தற்போது இந்த மருந்தை, செல்களின் முதிர்ச்சி அடையும் நடைமுறையில் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் இதன் விளைவாக ஏதேனும் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா என்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏதேனும் தவறுகள் நடந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக ஆய்வினை நடத்தி வருகிறார்கள்.

ஆக்ஸிஜென் அளவை அதிகரிக்கும்

ஆக்ஸிஜென் அளவை அதிகரிக்கும்

மெட்ஃபார்மின் எனும் இந்த மருந்து உடலில் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளை அதிகரிக்க செய்கிறது, இதனால் ஆரோக்கியமான நீண்ட வாழ்நாள் மக்களுக்கு கிடைக்க செய்யலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விலங்குகளின் மீதான ஆய்வு

விலங்குகளின் மீதான ஆய்வு

இந்த மெட்ஃபார்மினை விலங்குகள் மீது பயன்படுத்திய போது அவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 40% வரை இது வாழ்நாளை நீட்டித்து பலனளிக்கும் என நம்புகிறார்கள்.

மனிதர்கள் மீதான ஆய்வு

மனிதர்கள் மீதான ஆய்வு

எலி போன்ற விலங்குகள் மீது ஆய்வு செய்ததை வைத்து உடனே மனிதர்கள் மீது ஆய்வு நடத்திவிட முடியாது. ஆயினும் இது நல்ல பலனை அளித்துள்ளதால் மனிதர்கள் மீது வரும் 2016 ஆண்டு பரிசோதித்து ஆய்வு செய்யலாம் என ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறது

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறது

நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஏற்கனவே மெட்ஃபார்மினின் கலப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் எட்டு வருடங்கள் வரை அதிகமாக உயிர் வாழ்வதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

3000 பேர்

3000 பேர்

வரும் 2016-ம் ஆண்டு 70 - 80 வயதில் உள்ள 3000 பேர் மீது இந்த மெட்ஃபார்மினை பரிசோதித்து பார்க்கலாம் என ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், இதயம் மற்றும் புற்றுநோய் பாதிப்பில் இருக்கும் நபர்களை தெரிந்தெடுத்து ஆய்வை நடத்தவும் இவர்களால் முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

70 - 80 வயது வரை உயிர் வாழும் ஒருவரது வாழ்நாளை 110 - 120 வரை உயர்த்த இந்த மெட்ஃபார்மின் உதவும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World First Anti Aging Drug Will Double Our Average Lifespan Study

In a recent study, researches working on with the world first anti-aging drug, that will double our average lifespan. read here in tamil.
Desktop Bottom Promotion