இன்றைய இளம் ஆண்கள் அதிகமாய் படுக்கையில் தோல்வியுறுவது ஏன்???

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய தலைமுறையினரிடம், கடந்த சில வருடங்களாக வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இவர்களது வாழ்வியலில் ஏற்பட்டிருக்கும் வேகம், சூழ்நிலை, வேலைப்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஆண்களே! இதோ ஆண்மை குறைவு ஏற்படாமல் இருக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

இதனால் வசதி வாய்ப்புகள் அதிகரித்தது என்று மகிழ்ந்தாலும், வாழ்க்கையின் அடிப்படையான இல்லறம் பாதித்திருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை. அதிலும், ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் உடலுறவுக் கொள்ள தயங்குவதற்கான காரணங்கள்!!!

ஆம், இன்றைய இளம் ஆண்கள் பலரால் இல்லற வாழ்க்கையில் சிறந்து ஈடுபட முடிவதில்லையாம். அதற்கான காரணங்கள்...

ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது இல்லை

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது இல்லை

பெரும்பாலான இளம் ஆண்கள் வேலையைக் காரணம் காட்டியும், வெளிநாட்டு உணவுப் பழக்கம் என்ற பெயரிலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில்லை. தாம்பத்திய உறவில் இன்றைய ஆண்கள் தோல்வியுறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

புகை, மது, போதை

புகை, மது, போதை

இளம் வயதிலேயே அதிகமாக இன்றைய ஆண்கள் மது, புகை மற்றும் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்குகிறார்கள். இதற்கு எம்.என்.சி. போன்ற பெரும் நிறுவனங்களில் கை நிறைய இவர்கள் வாங்கும் சம்பளமும் ஓர் காரணம். இளம் வயதிலேயே அளவுக்கு அதிகமாக இவற்றை இவர்கள் உட்கொள்வதால், இவர்களது ஆண்மை தான் முதலில் பாதிக்கப்படுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அளவுக்கு அதிகமான வேலைப்பளு, மல்டி-டாஸ்கிங் என்ற பெயரில் நால்வர் செய்யும் வேலையை ஒருவரே செய்வது போன்றவை, இன்றைய இளம் ஆண்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக படுக்கையில் ஆண்களால் சரியாக செயல்பட முடிவதில்லை என கூறுகிறார்கள். கடந்த சில வருடங்களாக இளம் ஆண்கள் அதிகளவில் மன அழுத்தத்தால் பாதிப்படைந்து வருகிறார்கள்.

அதிகரிக்கும் வேலை நேரம்

அதிகரிக்கும் வேலை நேரம்

வேலை இடத்தில் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக இருப்பது, அதிகப்படியான நேரம் வேலை செய்வது தான். இது, மனதை மட்டுமில்லாது, உடலையும் சோர்வடைய வைக்கிறது. மற்றும் உட்கார்ந்தே வேலை செய்வதால் உடல் முழுதும் சீரான முறையில் இரத்த ஓட்டம் செல்வதில்லை. இதுவும், கூட ஓர் காரணமாக கூறப்படுகிறது.

இடர்பாடுகள்

இடர்பாடுகள்

தற்போதைய ஸ்மார்ட் போன் போன்ற அதிநவீன சாதனங்கள் மற்றும் சமூக இணையத்தில் மூழ்கியிருப்பது போன்றவை கூட ஆண்களின் உடல்நலத்தை வெகுவாக பாதிக்கிறது. முக்கியமாக, கழுத்தை தொங்க வைத்தப்படி அல்லது ஒரே நிலையில் பல மணிநேரம் படுத்து / அமர்ந்திருப்பது உங்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான பாகங்களின் செயல்பாட்டுத் திறனை குறைத்துவிடுகிறது.

வாழ்வியல் முறை

வாழ்வியல் முறை

இன்றைய இளம் ஆண்கள், நல்ல வாழ்வியல் முறையை தேடுகிறார்களே தவிர, வாழ்வதில்லை.

அதிகப்படியான ஆபாச படங்கள்

அதிகப்படியான ஆபாச படங்கள்

இன்றைய தினத்தில், இணையத்தில் இருந்து மிக ஏதுவாக வாட்ஸ்-அப்-க்கு கைமாறிவிட்டது ஆபாசப் படங்கள். இதனால், ஆபாசப்படம் பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதனால் இரண்டு விஷயங்கள் பாதிக்கப்படுகிறது. எதிர்பார்ப்பு அதிகரித்து (உடல் அழகு) நிஜத்தில் நடக்கும் உடலுறவு இவர்களுக்கு அலுத்துவிடுகிறது. மற்றொன்று காதல் வாழ்க்கையை முற்றிலுமாக இது பாதித்துவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Today's Men Are Failing In Bed

Why Today's Men Are Failing In Bed? read here.
Story first published: Wednesday, August 12, 2015, 15:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter