உங்கள் உடல்நலனை பற்றி புட்டு, புட்டு வைக்கும் சில வினோதமான அறிகுறிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மருத்துவரிடம் சென்று தான் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை. உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு அல்லது மாற்றம் ஏற்படுகிறது என்பதை உங்கள் உடலே சில அறிகுறிகளின் மூலம் வெளிபடுத்தும். உதாரணமாக மலம் கழிப்பதில் சிலருக்கு சிரமம் ஏற்படுகிறது எனில், அவர்கள் உடலில் நார்ச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

உங்கள் ராசி உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போல, உடலின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் பாதிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு என அனைத்தையும் நாம், நமது உடல் வெளிபடுத்தும் அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம். இதில் முக்கியமான சிலவற்றை பற்றி இனி இங்கு காணலாம்....

உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடையை சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு

இடையை சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு

உங்களுக்கு தெரியுமா? இடுப்பின் சுற்றளவு ஆண்களுக்கு 40 மற்றும் பெண்களுக்கு 34 அங்குலத்திற்கு மேலாக இருக்கும் பட்சத்தில், நீரிழிவு மற்றும் எதிர்வினை வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறதாம். இதனால், உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, கண் பார்வையில் குறைப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே, இடுப்பை சுற்றி "டயர்" அதிகரிப்பது போல இருந்தால் உடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

கண்களை சுற்றி மஞ்சம் புள்ளிகள்

கண்களை சுற்றி மஞ்சம் புள்ளிகள்

உங்கள் உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறி தான் இது. இந்த நிலையை மருத்துவ துறையில் ஆங்கிலத்தில் "Xanthelasma" என்று கூறுகிறார்கள். இதை முழுமையாக கண்டறிய காலையில் உணவருந்துவதற்கு முன்பு இரத்த பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இதனால் இதயம் மற்றும் மூளையின் செயல்திறன் குறைபாடு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

கருவளையம்

கருவளையம்

சரியான அளவு தூங்காமல் இருப்பதால் தான் கண்ணை சுற்றி கருவளையம் ஏற்பட காரணம். தூக்கமின்மை உடல் நலனை பெருமளவில் பாதிக்கும் ஒன்றாகும். எனவே, இவ்வாறு ஏற்படும் போது தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசனை பெறுங்கள்.

பாதத்தில் அரிப்பு

பாதத்தில் அரிப்பு

அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, ஷூவை அதிகநேரம் அணிந்திருப்பது அல்லது அதிக நேரம் நீச்சல் குளத்தில் செல்வழிப்பது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். பாதங்களில் ஃபங்கஸ் தொற்று ஏதேனும் ஏற்பட்டதன் மூலம் கூட இது போன்ற அரிப்பு ஏற்படலாம். எனவே, ஆன்டி-ஃபங்கஸ் கிரீம் பயன்படுத்தி சரி செய்ய முயற்சி எடுங்கள்.

இதழ் ஓரங்களில் வெடிப்பு

இதழ் ஓரங்களில் வெடிப்பு

இந்த அறிகுறியின் மூலம் உங்கள் உடல் கூறவருவது என்னவெனில், நீங்கள் உங்கள் டயட்டில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, பச்சை காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதழின் ஓரங்களில் வறட்சி, வெடிப்பு ஏற்பட்டுவிட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

முடி மெல்லிசாக ஆவது

முடி மெல்லிசாக ஆவது

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதன் அறிகுறியாக இது தென்படுகிறது, அதிலும் முக்கியமாக பெண்களுக்கு. தைராய்டு பிரச்சனை ஏற்படுவதன் அறிகுறியாக கூட இது இருக்கலாம். இதை கண்டறிய நீங்கள் இரத்த பரிசோதனை எடுத்து பார்க்க வேண்டும்.

தானாக உடையும் நகம்

தானாக உடையும் நகம்

வைட்டமின் பி7 குறைபாடு ஏற்படும் போது இது போல நகங்கள் தானாக உடைவது ஏற்படலாம். சில சமயங்களில் இது, ஃபங்கஸ் தொற்று, சொரியாசிஸ், எலும்பு பிரச்சனை போன்றவற்றின் அறிகுறியாக கூட தென்படும். இவ்வாறு அதிகமாக ஏற்படுகிறது எனில் மருத்துவரிடம் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

மலம்

மலம்

மலம் கழிப்பதில் சிரமம் அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் நார்ச்சத்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். எனவே, நீங்கள் தானிய உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றில் நார்சத்து அதிகமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Is Your Body Trying To Tell You

Here We have discussed about what is your body trying to tell you via some symptoms, in tamil. Take a look.
Subscribe Newsletter