சங்கோஜத்தின் காரணமாக நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிடக் கூடாத அறிகுறிகள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

பெரும்பாலும் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருப்பது நாம் தான். உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை தெரிந்தும் கூட மருத்துவரை அணுக மாட்டோம். ஆம், சில சங்கோஜமான பாகங்களில் சில அறிகுறிகள் தென்பட்டால் அதை பற்றி யாரிடமும் கூற மாட்டோம்.

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

இது, போன்ற அறிகுறிகளில் நீங்கள் தவிர்க்க கூடாத, பொருட்படுத்தாமல் விட்டுவிடக் கூடாத சில அறிகுறிகள் இருக்கின்றன. அவைகளில் சில, பெரிய ஆபத்துகளை வெளிகாட்டும் எச்சரிக்கை மணியாகவும் இருக்கின்றன.

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

உங்களது சந்கோஜதினால், அந்த அறிகுறிகளை பற்றி மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். இனி, சந்கோஜத்தின் காரணமாக நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிடக் கூடாத அறிகுறிகள் பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பக முலைகளில் மாற்றம்

மார்பக முலைகளில் மாற்றம்

பெண்களுக்கு மார்பகள் முலைகளில் திடீரென மாற்றங்கள் தென்படலாம். ஆனால், இதை போய் யாரிடம் கூற என்று அவர்கள் தவிர்த்துவிடுவார்கள். இது மரபணு சார்ந்த கோளாறாக கூட இருக்கலாம். தாய் பால் தராமல் இருப்பது, தாய் பால் சுரக்காமல் இருக்க எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் விளைவாக கூட இதுப் போன்று ஆகலாம். எனவே, மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

பிறப்புறுப்பில் நாற்றம்

பிறப்புறுப்பில் நாற்றம்

பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் அளவுக்கு அதிகமான நாற்றம் ஏற்படலாம். இது ஈஸ்ட் தொற்று, கருப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வயிறு வீக்கம்/ வாயுத்தொல்லை

வயிறு வீக்கம்/ வாயுத்தொல்லை

தொல்லைகளில் எல்லாம் பெரும் தொல்லை இந்த வாயுத்தொல்லை. மான பிரச்சனை என்று கருதப்படுவது. நீங்கள் சாப்பிட்ட உணவு அல்லது கூல் ட்ரிங்க்ஸ்ஸின் காரணமாக மட்டுமின்றி வயிற்றில் கட்டி, உடற்குழி நோய் போன்றவை ஏற்பட்டாலும் கூட வாயுத்தொல்லை ஏற்படும். எனவே, தொடர்ந்து வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் மருத்துவரிடம் கட்டாயம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

கட்டுப்பாடிழப்பு

கட்டுப்பாடிழப்பு

பெண்களில் சிலருக்கு ஓடும் போதோ அல்லது சிரிக்கும் போதோ கூட சிறிது சிறுநீர் கழித்துவிடுவார்கள். சில சமயங்களில் அவர்களால் சிறுநீரை அடக்கமுடியாமல் கூட போகலாம். இது, வயிற்று பகுதியில் ஏற்படும் அழுத்தப் பிரச்சனையின் வெளிபாடு. இதை சிறுநீர் அழுத்த கட்டுப்பாடிழப்பு என்றும் கூறுகின்றனர். இது போல உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் கூறி இதற்கான தீர்வை அறிந்துக் கொள்ளுங்கள்.

ஆண்மை குறைபாடு

ஆண்மை குறைபாடு

தற்போதைய வாழ்வியல் முறையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் லேப்டாப், மொபைல் போன்ற பல உபகரணங்கள் ஆண்மை இழப்பிற்கு காரணமாக இருக்கின்றன. இதை எளிதாக குணப்படுதிட முடியும். ஆனால், ஆண்கள் இதைப் பற்றி யாரிடமும் கூறாமல் கடைசி வரை அந்த குறையுடனே வாழ்ந்து விடுகின்றனர். தீர்வு உள்ள போது ஏன் மறைக்க வேண்டும். மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள தயங்காதீர்கள்.

அதிகமாக வியர்ப்பது

அதிகமாக வியர்ப்பது

சிலருக்கு அதிகப்படியான வேலை ஏதும் செய்யாமலே வியர்வை அதிகம் வரும். ஆனால், இதைப் பற்றி வெளியில் கூற தயங்குவார்கள். ஆனால், இது, நீரிழிவு, குறைந்த இரத்த சர்க்கரை அளவு, மன அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான அறிகுறியாய் காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Six Embarrassing Symptoms You Should NEVER Ignore

Do you know about the six embarrassing symptoms you should NEVER ignore? read here.