உயிரை பறிக்கும் நோய்களை கூட விரட்டியடிக்குமாம் ஸ்டெம்செல்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்டெம்செல் எனப்படுவது அனைத்துப் உயிரினங்களிலும் காணப்படும் ஒரு குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியில் இருந்து அறுத்து பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட வேண்டியது தான் ஸ்டெம்செல். வருங்கால மருத்துவ உலகையே ஆட்டிப் படைக்க போகிற இந்த ஸ்டெம்செல் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது. டொரன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எர்னஸ்ட் மெக்குல்லோச் (Ernest McCulloch), ஜேம்சு டில் (James Till) ஆகிய இருவரும் 1960-களில் செய்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் இந்த குருத்தணு எனப்படும் ஆய்வு வளர்ச்சியடைந்தது.

இறந்த உயிரணுக்களை புதிப்பிக்கவும், சேதம் அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட உடல் பாகங்களை புதிப்பிக்கவும் ஸ்டெம்செல் உதவும். இதனால், இப்போது நாம் குணப்படுத்தவே முடியாது என கூறிவரும் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயை கூட குணப்படுத்திவிடலாம் என ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் இதுப்போல மருத்துவ உலகில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தவுள்ள ஸ்டெம்செல் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தையை நல்ல முறையில் பாதுகாக்க நீங்கள் அவர்களது ஸ்டெம்செல்லை பாதுகாப்பது மிக மிக அவசியமாகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெம்செல் வகைகள்

ஸ்டெம்செல் வகைகள்

ஸ்டெம்செல்லை கரு மற்றும் வயதடைந்த என இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர்.

க்ளோனிங் (Cloning)

க்ளோனிங் (Cloning)

ஸ்டெம்செல்லை பயன்படுத்தி க்ளோனிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இதை வைத்து இரண்டு வகையாக க்ளோனிங் செய்ய முடியும். குழந்தை பேறு தன்மை குறைவாக உள்ளவர்கள் கருத்தரிக்க உதவ முடியும் மற்றும் இதன் அடுத்த படியாக ஓர் வளர்ந்த ஆளையே உருவாக்கிட முடியும் எனவும் கூறியிருக்கிறார்கள். இரண்டாம் வகையில் வெற்றியடைய இன்றளவிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கண்பார்வை திரும்ப பெறப்பட்டது

கண்பார்வை திரும்ப பெறப்பட்டது

கலிபோர்னியாவில், ஓர் விபத்தில் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு கண்பார்வை இழந்த ஒருவருக்கு ஸ்டெம்செல்லின் உதவியின் மூலம் விழித்திரை புதிதாக அவரது கண்களில் பொருத்தப்பட்டு அவருக்கு கண்பார்வையும் கிடைக்கப் பெற்றுள்ளார்.

டைப் 1 நீரிழிவு நோய்

டைப் 1 நீரிழிவு நோய்

டைப் 1 நீரிழிவு நோய் இருந்த ஒருவருக்கு அவரது கணையத்தில் ஸ்டெம்செல்லை உட்புகுத்தி மீண்டும் இயற்கை முறையில் இன்சுலின் சுரக்க செய்துள்ளனர். இந்த சிகிச்சைக்கான ஆராய்ச்சிகளை மருத்துவர்கள் மேற்கொண்டு தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

புது திசுக்கள்

புது திசுக்கள்

உங்கள் உடலில் ஏதாவது திசு சேதமடைந்து இருந்தால், ஸ்டெம்செல் சிகிச்சையினால் அந்த திசுக்களை புதுப்பிக்க முடியும்.

எந்தெந்த பாகங்கள் உருவாக்கிட இயலும்

எந்தெந்த பாகங்கள் உருவாக்கிட இயலும்

தசை, எலும்பு, நரம்பு மற்றும் இதர உடல் பாகங்கள் அனைத்தும் உருவாக்கிட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

யாருக்கு எல்லாம் உதவும்

யாருக்கு எல்லாம் உதவும்

ஒருவரது ஸ்டெம்செல் அவருக்கு மட்டுமல்லாது அவரது உடன் பிறந்தோர் மற்றும் பெற்றோருக்கும் கூட பொருந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stem Cell Can Cure Any Deadly Diseases

Is there any deadly disease? Just tell them if stem cell take step into the floor, they should run away. Yeah! Medical scientists says stem call can cure any deadly disease.
Story first published: Tuesday, March 17, 2015, 18:33 [IST]
Subscribe Newsletter