மரபணு மூலமாக உங்களை பின்தொர்டர்ந்து வரும் சில ஆச்சரியமூட்டும் பழக்கங்கள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

நமது கண், மூக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகளின் வடிவம் / உருவம். சிரிப்பு, நடை பழக்கம், கோபம் போன்ற குணாதிசயங்கள் என நமது உடலின் செயல்பாடுகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது நமது மூதாதையரின் மரபணுக்கள்.

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

"அவன் பாக்க அவன் தாத்தா மாதிரியே இருக்கான், அவன் பண்றது எல்லாம் அவனோட பாட்டி பண்ற மாதிரியே இருக்கு" என உங்கள் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தினரோ பேசி நீங்கள் கேட்டிருக்கலாம். ஆம் உண்மை தான், ஓர் தலைமுறை விட்டு அடுத்த தலைமுறையுடன் தான் கை கோர்த்து பயணிக்குமாம் மரபணு.

மரணமற்ற வாழ்விற்கு அடித்தளம், ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடிப்பு!!!

அதாவது, அப்பா மகன் உறவை விட, தாத்தா பேரன் மத்தியில் தான் ஒரு போன்ற குணாதிசயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் செயல்பாடுகள் மட்டுமின்றி நோய்களும் கூட மரபணு வழியாக தொடர்ந்து வரும் என்று கூறப்படுகிறது. நாம் அறிந்த வரை அம்மாவிற்கு நீரிழிவு நோய் இருந்தால் மகனுக்கும் வரும் என்பது தான்.

ஆண்களின் பிறப்புறுப்பு பகுதியை பாதிக்கும் "ஆர்.ஜி.எஸ்" என்னும் புதிய நோய் - எச்சரிக்கை!!!

ஆனால், நீரழிவு நோயையும் தாண்டி வேறு சில நோய்களும் கூட பரம்பரை மரபணு வழியாக உங்களை பின் தொடர்ந்து வரும்.....

மனிதர்களின் டி.என்.ஏ'வை சேகரிக்க போட்டிப்போட்டு இயங்கி வரும் அமேசான், கூகுள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

சமீபத்தில் மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்து அதிர்ச்சியானது, மார்பக புற்றுநோயும் கூட மரபணு வழியாக ஏற்படலாம் என்பது. எனவே, முப்பது வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடா வருடம் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும். தற்போதைய நிலையில், பெண்களை பாதிக்கும் புற்றுநோயகளில் மார்பக புற்றுநோய் தான் முதன்மையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடுக்கச் சீர்கேடு (Tic Disorders)

நடுக்கச் சீர்கேடு (Tic Disorders)

நரம்பு மண்டலம் சார்ந்த குறைபாடுகளை தான் டிக் (TIC) சீர்கேடுகள் என்று கூறுகின்றனர். இது திடீரென ஏற்படும் மாற்றங்கள் என கூறப்படுகிறது. இந்த நரம்பியல் சார்ந்த கோளாறுகளும் கூட மரபணுக்களின் தொடர்ச்சியாக ஒருவரை பாதிப்படைய வைக்கலாம். 4,826 பேரை வைத்து செய்த ஓர் ஆராய்ச்சியில் இதுவும் மரபணு சார்ந்து தொடரும் பாதிப்புகளில் ஒன்றென கண்டறியப்பட்டுள்ளது.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

பலரும் அறியாத ஒன்று மரபணு காரணமாக மதுப்பழக்கம் ஏற்படும் என. ஆனால், இதை நீங்கள் உங்களது நண்பர்கள் வட்டாரத்தில் கூட கண்டிருக்கலாம், ஒரு சிலரை பரம்பரை குடிகாரர்கள் என்று கூறி நக்கல் செய்வார்கள். அவர்களும் கூட குடிப்பதை நிறத்தவே முடியவில்லை என கூறுவார்கள். மரபணுக்களின் காரணமாக கூட குடிப்பழக்கம் ஏற்படலாம்.

உடல் பருமன்

உடல் பருமன்

சிலருக்கு என்ன டயட் இருந்தாலும், எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், உணவு குறைவாக அருந்தினாலும் கூட உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில், மரபணு மற்றும் பரம்பரை காரணத்தினாலும் கூட உடல் பருமன் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

கற்றல் இயலாமை

கற்றல் இயலாமை

சிலருக்கு என்ன முயற்சி செய்தாலும் கற்றலில் குறைபாடு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் "இவனாச்சும் நல்ல படிப்பான்னு பார்த்தா இவனும், அவன் தாத்தா, அப்பா போல திரியிறான்" என்று குறை கூறுவார்கள். இது அந்த பையனின் குறைபாடு அல்ல, மரபணு குறைபாடு. ஆனால், இவர்களுள் வேறு ஏதேனும் திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து சரியாக ஊக்குவித்தால் நல்ல முன்னேற்றம் காண்வர்கள்.

தூக்கத்தில் நடப்பது

தூக்கத்தில் நடப்பது

தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்களிடம் இருந்து 47.4% அவர்களது குழந்தைகளுக்கும் அந்த வியாதியின் தாக்கம் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை பெற்றோர் இருவருக்கும் அந்த பாதிப்பு இருந்தால், இந்த சதவீதம் 61.5 என்ற அளவில் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Six Conditions Science Recently Discovered Are Hereditary

    Genetic Predisposition Goes Further Than You Think, Six Conditions Science Recently Discovered Are Hereditary.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more