Latest Updates
-
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்!
ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!
ஆறாம் விரலாய் சிகரெட் இல்லமால் கூட ஓர் ஆணை பார்த்துவிட முடியும். தேநீர் பருகாத ஆண்களை காண்பதுஅரிது. இதில், டீயும், சிகரெட்டும் இணைபிரியா பிறவிகளாக பழக்கம் வைத்திருக்கும் ஆண்கள் தான் அதிகம். ஒரு சிப் டீ, ஒரு ஃபவ் சிகரெட் என்பது பலரது பழக்கமாக இருக்கிறது.
டீ என்பது ஆண்களின் வாழ்கையில் இருந்து பிரிக்க முடியாத காரியமாக இருக்கிறது எனில், அதை ஏன் நீங்கள் ஆரோக்கியமான வழியில் பின்பற்ற கூடாது? என்பது தான் நமது கேள்வி. ஆம், ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்கும் சில டீ வகைகள் இருக்கும் போது நீங்கள் அதை பின்பற்றி பயனடையலாமே...

செம்பருத்தி டீ
செம்பருத்தி வெறும் பூ மட்டுமல்ல, இது ஒருவகையான மூலிகையும் கூட. இது ஆண்களின் உடல்நலனை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது. மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

டார்ஜிலிங் டீ
டார்ஜிலிங் டீ நிறைய ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. நிறைய வகைகள் இருந்தாலும் கூட இது தரும் பயன் ஒன்று தான். டார்ஜிலிங் டீ மன அழுத்தத்தை குறைக்கவும், டைப் 2 நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

இஞ்சி டீ
இரத்த ஓட்டம் அதிகரிப்பு, சீரிய குடலியக்கம் மற்றும் வயிறு சார்ந்த உபாதைகள் போன்றவற்றுக்கு நல்ல தேர்வு தருகிறது இஞ்சி டீ. இதில் வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இதர மினரல்ஸ் சத்துகள் இருக்கின்றன.

எலுமிச்சை டீ
உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகிறது எலுமிச்சை டீ. மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் இது உதவுகிறது.

ப்ளாக் டீ
இதயம், எலும்புகளின் வலிமை, மன அழுத்தம் குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க, நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்க என பல நன்மைகளை விளைவிக்கிறது ப்ளாக் டீ.

கிரீன் டீ
இந்த உலகிலேயே சிறந்த டீ எது என்றால், அது கிரீன் டீ தான். இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் சிறந்த டீயாக திகழ்கிறது கிரீன் டீ.



Click it and Unblock the Notifications
