இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

By: John
Subscribe to Boldsky

மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு.

ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

ஆனால், இரண்டு பிறப்புறுப்பு இருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரே இது குறித்து யூ ட்யூபில் (Youtube) சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார்.

பொறந்த மேனியா தூங்குறதுனால என்னென்ன நன்மையெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா!!!

மிகவும் பிரபலாமாகி அந்த வீடியோ இணையதளத்தையே கலக்கி வருகிறது. இனி, இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் கேஸான்டிரா பங்க்சனின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளல்லாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாத்து போன்ற நடை

வாத்து போன்ற நடை

கேஸான்டிரா பங்க்சனின் நடை, சிறு வயது முதலே வாத்து போல தான் இருந்திருக்கிறது. முதலில் அனைவரும் இதை கேலி, கிண்டல் செய்திருக்கின்றனர், குடும்பத்தினர் உட்பட.

சிறு வயதிலேயே பூப்பெய்தியது

சிறு வயதிலேயே பூப்பெய்தியது

பத்து வயதிலியே பருவம் அடைந்துவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். அது ஓர் கிறிஸ்துமஸ் நாள் என்று அந்த ஒளிநாடாவில் கூறியிருக்கிறார்.

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் பிரச்சனை

ஒரு சில மாதங்களில் மூன்று முறை மாதவிடாய் ஏற்படுமாம் கேஸான்டிரா பங்க்சனுக்கு. இதற்கு எதிர் மாறாக சில சமயம் ஆறு மாதங்கள் வரை மாதவிடாயே ஏற்படாமலும் இருந்திருக்கிறதாம்.

 நிலை மாற்றம்

நிலை மாற்றம்

இதனால் மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.

அசௌகரியம்

அசௌகரியம்

அடி வயிற்றில் ஏதோ ஓர் அசைவு ஏற்படுவது போன்ற உணர்வு இருக்குமாம் கேஸான்டிரா பங்க்சனுக்கு. மற்றும் அடிக்கடி முதுகு மற்றும் இடுப்பு வலி வந்திருக்கிறது. இதனால் ஏதோ சிறுநீரக கோளாறாக இருக்குமோ என்று அஞ்சி இவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

சிகிச்சை

சிகிச்சை

இரத்த பரிசோதனை, ஸ்கேனிங், மற்றும் இதர ஆய்வுகள் செய்துப் பார்த்ததில், கேஸான்டிரா பங்க்சன் ஒரு சிறுநீரகம் மற்றும் தான் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அதன் பின்பும் சில பிரச்சனைகள் எழுந்ததால், தீவரமாக கேஸான்டிரா பங்க்சனின் உடலை பரிசோதனை செய்து பார்த்த போது தான் இவருக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின் சாதாரணமாகிவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். பெற்றோருக்கு தான் கொஞ்சம் பயம் அதிகரித்ததாம். இது இல்லற வாழ்க்கையை கெடுத்துவிடுமோ என்று அஞ்சியிருகின்றனர் கேஸான்டிரா பங்க்சனின் பெற்றோர்.

கேஸான்டிரா பங்க்சன் கூறுவது

கேஸான்டிரா பங்க்சன் கூறுவது

இல்லற வாழ்க்கை குறித்து கேஸான்டிரா பங்க்சன்,"ஒருவேளை எனக்கு கருத்தரித்த பின்னும் கூட மாதவிடாய் தொடரலாம் என்று கருதுகிறேன்.." என்று கூறியிருக்கிறார்.

யாரிந்த கேஸான்டிரா பங்க்சன்?

யாரிந்த கேஸான்டிரா பங்க்சன்?

கேஸான்டிரா பங்க்சன் எனும் இவர் யூ ட்யூபில் விமர்சனம் பேசுபவர். இவர் இதற்கு முன்பே பல வீடியோக்கள் விமர்சனம் பேசி பிரபலமானவர். இந்த வீடியோ இவரை உலகப்புகழ் அடைய செய்துவிட்டது.

யூ ட்யூப்

யூ ட்யூப்

இதுவரை இந்த வீடியோவை யூ ட்யூபில் 13 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking A Woman Has Lives With Two Vaginas

Do you know about a woman who has lives with two vaginas? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter