For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமா???

|

பெரும்பாலும் நமது உடல், "போதும்டா சாமி போய் தூங்கு என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது.." என்று சொல்லும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி. ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

சிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என இவர்கள் கொட்டாவி விடாத நேரமே இருக்காது. இதற்கு என்ன காரணம்..??

சில உடல்நல குறைபாடுகளின் அறிகுறிகளாக கூட கொட்டாவி இருக்கிறது. வியப்பாக இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரலை பரிசோதியுங்கள்

கல்லீரலை பரிசோதியுங்கள்

சோர்வின்றி அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம்.

எம்.எஸ். (Multiple Sclerosis) தாக்கம்

எம்.எஸ். (Multiple Sclerosis) தாக்கம்

சமீபத்திய ஆய்வில், எம்.எஸ். (Multiple Sclerosis) தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு அவர்களது உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள முடிவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை அதிகம் கொட்டாவி வர செய்கிறதாம்.

மூளையின் ஆரோக்கியம்

மூளையின் ஆரோக்கியம்

அதிகமாக கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர். மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால் கூட அதிகம் கொட்டாவி வருமாம்.

கை-கால் வலிப்பு

கை-கால் வலிப்பு

கொஞ்சம் அதிர்சியாக இருந்தாலும் கூட நம்பி தான் ஆகவேண்டும். சோர்வின்றி அடிக்கடி கொட்டாவி வருவது கை-கால் வலிப்பு ஏற்படுவதனால் கூட இருக்கலாம். வலிப்பு ஏற்படுவதால் மூளையில் ஏற்படும் எரிச்சல் ஓர் சிக்னலை வெளிப்படுதுமாம், அதனால் கூட அதிகம் கொட்டாவி வரலாம்.

மருந்துகளின் காரணமாக

மருந்துகளின் காரணமாக

நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விளைவால் ஏற்படும் சோர்வு கூட அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். மருந்து மாத்திரைகள் உங்களை தூக்க நிலைக்கு எடுத்து செல்ல கூடியவை. அந்த மயக்க நிலையின் காரணத்தினாலும் கொட்டாவி வருகிறது.

தூக்க குறைபாடு

தூக்க குறைபாடு

தூக்கமின்மை போன்ற தூக்க குறைபாடுகளினால் கூட அதிகம் சோர்வின்றி கொட்டாவி வரலாம்.

களைப்பு

களைப்பு

பெரும்பாலும் அனைவருக்கும் அதிகம் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருப்பது உடல் சோர்வும் மன அழுத்தமும் தான். சோர்வின்றி அதிகம் கொட்டாவி வந்தால், எதற்கும் மருத்தவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Reasons Why You Yawn So Much

Dont you question yourself on why you yawn so much without a reason? Well, Boldsky has given you a few reasons as to why we yawn frequently. Take a look.
Desktop Bottom Promotion