உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி, உங்கள் சுவாசம் என்ன சொல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா???

By: John
Subscribe to Boldsky

வாகனங்களுக்கு எப்படி பெட்ரோல், டீசல் இயங்க உதவுகிறதோ, அவ்வாறு தான் சுவாசம் உலகில் உள்ள உயிர்கள் இயங்க உதவுகிறது. பெட்ரோல், டீசல் தீர்ந்துவிட்டால் கொஞ்ச நேரம், கொஞ்ச நாள் கழித்து கூட மீண்டும் நிரப்பி வண்டியை ஓட்டலாம். ஆனால், சுவாசம் நின்ற மறுநொடியே நாம் அதோகதி தான். மூன்று நாள் கழித்து நம்மை பற்றி நம்ம வீட்டு "வுமன்"லிருந்து, எமன் வரை எவனும் நினைக்கமாட்டான்.

உங்கள் உடலில் ஏற்படும் குறைபாடுகளை பற்றி உங்கள் உடலே அவ்வப்போது எடுத்துரைக்கும். ஆனால், அதை நாம் எந்த அளவு எடுத்துக் கொள்கிறோம், புரிந்துக்கொள்கிறோம் என்பது தான் முக்கியம். உங்கள் சுவாசத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்று கண்டறிய முடியும்.

மூச்சு விடுவதில் சிரமம், சுவாச துர்நாற்றம் என பல எச்சரிக்கை மணிகளை அவ்வப்போது அடிக்க நமது உடல் தவறுவதே இல்லை. அதை நாம் எப்படி கண்டறிவது.., தொடர்ந்துப் படியுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு

நீரிழிவு

உங்கள் சுவாசத்தில் பேரிக்காய் அல்லது அம்மோனியா போன்ற வாசம் வந்தால் உங்களுக்கு டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது என்று அர்த்தம். உங்கள் உடலில் இன்சுலின் குறைந்தால் இதுப் போன்று நடக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சைனஸ்

சைனஸ்

தூசு போன்ற வாசம் வருவது, அல்லது அதிகமான துணிகள் இருக்கும் இடத்தில் வரும் வாசம் போன்ற சுவாசதில் வந்தால் உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

புளிப்பு பால் வாசம்

புளிப்பு பால் வாசம்

உணவுக் கட்டுபாட்டில் இருப்பவர்கள், கார்போஹைட்ரேடே இல்லாது, அதிகமான புரதச்சத்து மட்டும் எடுத்து வந்தால் இதுப் போன்ற வாசம் வருமாம். ஒருவேளை நீரிழிவு நோய் இறந்தால் கூட சுவாசத்தில் இதுப் போன்ற வாசம் வெளிப்படலாம் என்றுக் கூறப்படுகிறது.

 அழுகிய சதை நாற்றம்

அழுகிய சதை நாற்றம்

உங்கள் சுவாசத்தில் அழுகிய சதைப் போன்ற வாசம் வந்தால் அடிநா அழற்சி (TONSILLITIS) பிரச்சனை வந்திருக்கலாம் என்று அர்த்தம்.

 கசந்த வரட்சியான வாசம்

கசந்த வரட்சியான வாசம்

ஒருசிலருக்கு சுவாசிக்கும் போது காலை வேளைகளில் ஏற்படுவது போன்ற கசந்த வரட்சியான வாசம் வெளிப்படும். இது, உங்களுக்கு வாய் வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை குறிக்கிறது. மற்றும் உங்கள் வாயில் போதிய அளவு எச்சில் சுரக்காவிடாலும் இது போன்று ஆகும்.

மீன் வாசம்

மீன் வாசம்

மீன் போன்ற வாசம் வருவதற்கு காரணம் நைட்ரஜன் தான் என்று கூறப்படுகிறது. உங்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டால் தான் இது போன்ற மீன் வாசம் சுவாசத்தில் வெளிப்படும் என்று கூறப்படுகிறது.

மலம் போன்ற வாசம்

மலம் போன்ற வாசம்

உங்களுக்கு ஈறு பிரச்சனைகள் இருந்தால் சுவாசிக்கும் போது மலம் போன்ற கெட்ட வாசம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மற்றும் குடல் பகுதிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் கூட இதுப் போன்ற வாசம் சுவாசத்தில் வெளிப்படலாம் என்றும் கூறப்படுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

seven things your breath is trying to tell you

Do you know about the 7 things your breath is trying to tell you? read here.
Story first published: Wednesday, June 3, 2015, 16:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter