For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேகத்தின் முடி வளர்ச்சி உங்கள் உடல் நலனை பற்றி என்ன கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா???

By John
|

தலைமுடி, தாடி, மீசை போன்ற இடங்களில் அனைவருக்கும் ஒரே மாதரியான கேச வளர்ச்சி இருந்தாலும், தேகத்தில் ஒவ்வொருவருக்கு முடி அடர்த்தியாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும், மிக சிலருக்கு தேகத்தில் முடியின் வளர்ச்சியே இருக்காது. இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் தேகத்தின் முடி வளர்ச்சியை வைத்து, உங்களது உடல் நலனை பற்றி கூற முடியுமாம். தேக முடிகளின் வளர்ச்சி மற்றும் குறைபாட்டிற்கு உங்களது உடல் நலம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இனி, தேகத்தின் முடிகள் உங்கள் உடல் நலனை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆட்டோ இம்யூன் பிரச்சனை (Autoimmune)

ஆட்டோ இம்யூன் பிரச்சனை (Autoimmune)

இது மிகவும் அபூர்வமாக ஏற்படும் ஓர் பிரச்சனை ஆகும். மயிர்கால்களின் வலு குறைந்து, புருவம், தலை, உடல் பாகங்களில் முடிகள் தானாக கொட்ட ஆரம்பித்துவிடும். ஏன் இமைகளின் முடிகள் கூட முழுதாய் உதிரும் வாய்ப்புகள் இருக்கிறது. திட்டமிடப்பட்ட ஸ்டீராய்டுகளின் சிகிச்சையின் மூலமாக, மீண்டும் முடியை வளர வைக்க முடியும்.

 ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன் சமநிலையின்மை

ஆண், பெண் இருவருக்கும் எதிர் பாலினத்தின் ஹார்மோன்கள் குறைவான சதவீதம் இருக்கும். தானாக இந்த எதிர்பாலின சதவீதம் அதிகரிக்கும் போது, பெண்களுக்கு தாடை, கண்ணம், மேல் உதடு பகுதிகளில் லேசாக முடியின் வளர்ச்சி தென்படும். இல்லையேல் முடி கொட்டும் பிரச்சனை கூட ஏற்படலாம். இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் காரணமாகும். ஆண், பெண் இருவருக்கும் வெவேறு தேக வளர்ச்சி வகை மரபணுவில் இருக்கும். இதில் மாற்றம் ஏற்படுவதால் தான், இவ்வாறான கேச பிரச்சனைகள் வருகிறது.

கருப்பை பரிசோதனை அவசியம்

கருப்பை பரிசோதனை அவசியம்

மாதவிடாய் நாள் தள்ளி போகும் பிரச்சனையோடு முடி உதிரும் பிரச்சனையும் இருந்தால், கருப்பை பரிசோதனை செய்திக்கொள்ள வேண்டியது அவசியம். கருப்பையின் அதிக வளர்ச்சியால் பல்பையுரு கருப்பை நோய்க்குறிக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கட்டியாக கூட இருக்கலாம்

கட்டியாக கூட இருக்கலாம்

திடீரென அதிகமான முடி உதிரும் பிரச்சனை ஏற்படுவது (குறைந்தது ஆறு மாத காலத்திற்குள்) உங்கள் உடலில் கட்டி உருவாகியிருக்கலாம் என்பதற்கான அறிகுறி. எனவே, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இரத்த பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும், முதலில் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இரும்புச்சத்து குறைபாடு அல்லது தைராய்டு பிரச்சனை

இரும்புச்சத்து குறைபாடு அல்லது தைராய்டு பிரச்சனை

அனைவருக்கும் காலநிலைக்கு ஏற்ப முடி உதிர்தலும், வளர்தலும் ஓர் சுழற்சி முறையில் இருக்கும். ஆனால், உன்னித்து பார்க்கும் அளவு, உங்கள் தேகத்திலோ, தலையிலோ அளவுக்கு அதிகமான முடி உதிர்தல் இருந்தால், ஒன்று இரும்புச்சத்து குறைப்பாடாக இருக்க வேண்டும். அல்லது, தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகப்படியான இரத்த போக்கு ஏற்படும் போது கூட இவ்வாறான முடி உதிர்வு ஏற்படலாம். எனவே, மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

தீயப் பழக்கங்கள்

தீயப் பழக்கங்கள்

சில போதை பொருள்களில் இருக்கும் மூலப்பொருட்கள் முடியின் வளர்ச்சியை குறைக்கும் திறன் கொண்டதாகும். அதனால் கூட முடி உதிர்வுகள் ஏற்படலாம்.

பரம்பரை மரபணு

பரம்பரை மரபணு

இந்த பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, பெரும்பாலும், ஒவ்வொரு தனி மனிதரின் பரம்பரை மரபணு தான், அவரவர்களின் முகம், தாடி, அக்குள் மற்றும் மற்ற உடல் பகுதிகளில் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Things Your Body Hair Says About Your Health

Everyone should know about the seven things that your body hair says about your health. take a look...,
Desktop Bottom Promotion