தலை முதல் கால் வரை அனைவரும் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டிய உடல்நல பரிசோதனைகள்!!!

By: John
Subscribe to Boldsky

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக அரிதான நோய்களாகவும், உடல்நல கோளாறுகளாகவும் கருதப்பட்டு வந்த மாரடைப்பு, இருதய குழாய் பிரச்சனைகள், புற்றுநோய், மூளை முடக்கு வாதம் போன்றவை இன்று மிக சாதாரணமாக. ஏதோ, காய்ச்சல் சளியை போல மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

நாம் குழந்தைகளாக இருந்த போது, புற்றுநோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஒருசிலரை பார்த்திருப்போம். ஆனால், இன்றோ இது, அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் விஷயமாக உருவெடுத்து இருக்கிறது. நமது வாழ்க்கையும் வாழ்நாளும் சுருங்கிக்கொண்டே வருவதை நீங்கள் என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? நிச்சயமாக இருக்காது.

ஆண்களே! அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!

நமது தாத்தாக்கள் இறக்கும் போது அவர்களது வயது 80-90களில் இருந்தது. ஆனால், இப்போதோ, 50 எட்டுவதே மிக கடினமான செயலாக இருக்கிறது. அதிகரித்து வரும் உடல்நல் கோளாறுகள் தான் இதற்கு காரணம் என்று கூறிட முடியாது. வாழ்வியலின் வேகத்தில், நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள தவறுவிட்டோம்.

தேகத்தின் முடி வளர்ச்சி உங்கள் உடல் நலனை பற்றி என்ன கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா???

"வரும் முன் காப்போம்" என்ற வாக்கியத்தை பள்ளி வாழ்க்கையோடு மறந்துவிட்டு வாழ்ந்து வருகிறோம். ஒரு சில பரிசோதனைகளை ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது, உங்களுக்கும், உங்களை நேசிக்கும் குடும்பத்திற்கும் நன்மை விளைவிக்கும்...

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்

ஐரோப்பியாவில் நடத்திய ஆய்வு ஒன்றில், குடல் புற்று நோய் பொதுவாக ஏற்படும் புற்றுநோய் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் பெரியதாய் எந்த அறிகுறியும் காட்டாது. ஆனால், இறுதியில் இதன் விளைவுகள் எல்லா புற்றுநோய்களை போலவும் மிகவும் கொடுமையானதாக தான் இருக்கும். எனவே, 40-50 வயது உள்ளவர்கள் இந்த பரிசோதனையை செய்துக் கொள்வது நல்லது.

கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங்

கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங்

பெரும்பாலான பெண்களுக்கு இப்போது கர்ப்பப்பை வாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் பரிசோதனை செய்யாத பலருக்கு கர்பப்பை வாய் புற்றுநோயாக கூட மாறியிருக்கிறது. எனவே, பெண்கள் கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள்

கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள்

ஆண், பெண் இருபாலினரும் கொழுப்பு மற்றும் இரத்த பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இதய கோளாறுகள், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பதே இந்த கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான்.

மார்பக புற்றுநோய் பரிசோதனை

மார்பக புற்றுநோய் பரிசோதனை

உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் அதிக இரசாயன கலப்பு உள்ள அலங்கார பொருட்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களினால் இன்றைய இளம் பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் பாதிப்புஏற்படுகிறது. எனவே, வருடம் ஒருமுறை மார்பக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

கண் பரிசோதனைகள்

கண் பரிசோதனைகள்

கண் பரிசோதனை எல்லாம் தேவையா என்று நீங்கள் நினைக்கலாம். என்ன மீறி போனால் கண்ணாடி அணிய கூறுவார்கள் என்று நிறைய பேர் சாதரணமாக நினைக்கின்றனர். முன்பெல்லாம் 70 வயது முதியவர்களுக்கு இருந்த கண் பிரச்சனைகள் இன்றைய 20 வயது இளைஞர்களுக்கு இருக்கிறது. எனவே, கண் பரிசோதனை செய்துக்கொள்வது, உங்கள் பார்வையை பாதுகாக்கும்.

சரும பரிசோதனை

சரும பரிசோதனை

முக பருக்களுக்கு எடுத்துக்கொள்ளும் அளவு கூட, சருமத்தின் மீது யாரும் அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. நீங்கள் தினமும் பயன்படுத்தும், வாசனை திரவியம், சென்ட்டு, பவுடர், அலங்கார பொருட்கள் போன்றவை கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் சருமத்தில் நஞ்சாய் பரவிக் கொண்டிருகிறது. இது, சரும புற்றுநோய், சரும அழற்சிகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, சரும பரிசோதனைகள் செய்துக்கொள்ளவதன் மூலம், இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

பொது உடல் பரிசோதனை

பொது உடல் பரிசோதனை

மற்றும் வருடம் ஒரு முறையாவது குடும்பத்துடன், குறைந்தது 30 வயதிலிருந்தாவது பொது உடல் பரிசோதனை செய்துக்கொள்வது உங்கள் உடல் நலனை பாதுகாக்க உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Health Tests That Really Could Save Your Life

Seven Health Tests That Really Could Save Your Life and no one should ignore.
Story first published: Wednesday, July 15, 2015, 12:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter