கோடையில் உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

கணினியின் முன் அமர்ந்த பின்னே உடல் எடை குறைப்பதென்பது அன்றாட கவலையாகிவிட்டது. இந்த கவலையோடு, கோடைக் காலத்தில் வெட்பமும் சேர்ந்து உங்களை துவம்சம் செய்கிறதா? கவலையை விடுங்கள். கோடையில் உங்கள் உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள் இருக்கின்றன.

ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

உண்மையிலேயே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், உங்களது உணவு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம். ஒரு சில உணவுகள், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுத்து, உங்களது பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.

ஆண்களே! உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!

அவ்வாறான உணவுகள் என்னென்ன, அவை எந்த வகையில் கோடைக் காலத்தில் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவான ஆப்பிளில், தேவையான அளவு நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்து உங்களது செரிமானத்தை சீரான முறையில் செயல்பட உதவும். நீங்கள் உங்கள் உணவை உட்கொள்ளும் 20 நிமிடங்களுக்கு முன்பு ஆப்பிள் சாப்பிட்டால், பசி குறையும். இதனால், உடல் எடை வெகுவாக குறைக்க இது வழிவகுக்கும்.

வான்கோழி

வான்கோழி

சிக்கனுக்கு சிறந்த மாற்று உணவு வான்கோழி, இதில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. மற்றும் இது புரதச்சத்து நிறைந்த உணவு. வான்கோழிகுறைந்த அளவில் கொழுப்பும், கலோரிகளும் கொண்ட உணவென்பதால் உங்கள் உடல் எடைக் குறைய இது சீரிய வகையில் உதவும்.

 ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

உங்கள் உணவுக் கட்டுப்பாட்டில் குறைந்த கலோரிகள் உள்ள ப்ரோக்கோலியை சேர்த்துக் கொள்வதனால், விரைவாக உடல் எடையை குறைக்க இது பயன் தருகிறது.

பாதாம்.

பாதாம்.

வளர்சிதை மாற்றத்தை தூண்டும் தன்மை உடையது பாதாம். இது கொழுப்பைக் குறைக்கவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.

மிளகு

மிளகு

உடல் எடையைக் குறைக்க மிளகு பெருமளவில் உதவுகிறது. மிளகில் கொழுப்பைக் கரைக்கும் தன்மை இருக்கிறது. உங்கள் உணவில் சிறிதளவு மிளகை தினமும் சேர்த்துக் கொள்வதனால் உடல் எடையை பெருமளவில் குறைக்க முடியும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகை உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உங்கள் குடல் இயக்கத்தை சீரான முறையில் செயல்பட உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் நார்ச்சத்து உங்களது செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. இதனால், உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

கிரீன் டீ

கிரீன் டீ

ஒரு நாளுக்கு இரு முறை கிரீன் டீ பருகுவது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. மற்றும் இது நல்ல வளர்ச்சிதை மாற்றத்தை உண்டாக்கக் கூடியது ஆகும். மேலும், பசியைக் குறைக்கும் தன்மை கிரீன் டீயில் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Foods That Help Burn Fat In Summer

Metabolism is what converts food into energy. A slow rate means calories are more likely to be converted into fat. While exercise helps, and so does portion control, here are those foods that act as the the biggest metabolism boosters.