For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களிடமும் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? - ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம்!

|

சென்ற தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது கடினமாகவும், நோய் பாதிப்பு குறைவாகவும் இருந்தது. இந்த தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது எளிதாகவும், அதைவிட சுலபமாக நோய்களை சம்பாதிப்பது மிக எளிமையாக இருக்கிறது. முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது போல, இன்று நீரிழிவு, இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

பக்கவாதத்தை தடுக்க பக்கா உணவுகளை சாப்பிடுங்க!!!

பொது மருத்துவமனை என்ற வழக்கு மாறி, சிறப்பு மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கண், இதயம், ஈ.என்.டி, டென்டல், சிறுநீரகம் என தனி தனி சிறப்பு மருத்துவமனைகள் தோன்றி மக்களின் உயிரையும், பணத்தையும் அரித்து எடுத்து வருகின்றன. முன்பெல்லாம் ஸ்ட்ரோக் என்ற வார்த்தையை நாம் கேட்டது கூட இல்லை.

தினமும் ஒரு கப் கோலா குடிச்சா என்ன ஆகும்? - ஹார்வர்ட் ஆய்வின் அதிர்ச்சி தகவல்கள்!

ஆனால், இன்று முப்பதை நெருங்கும் போதே, இதய பாதிப்பு, ஸ்ட்ரோக், மாரடைப்பு, நீரிழிவு என ஓர் பட்டியலே நீள்கிறது. இனி, முப்பது வயதில் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதை வெளிபடுத்தும் அபாய அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைவலி

தலைவலி

எந்த காரணமும் இன்றி திடீரென தலைவலி ஏற்படுவது. கடினமான வலியை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

நினைவிழப்பு

நினைவிழப்பு

நீங்கள் செய்துக் கொண்டிருக்கும் வேலைக்கு மத்தியில் திடீரென நினைவிழப்பு ஏற்படுவது. அல்லது சாதாரணமாக இருக்கும் போது கூட நினைவிழப்பு ஏற்படுவது போன்றவை.

பேச்சு குழைதல்

பேச்சு குழைதல்

பேசும் போது தெளிவின்றி குழைதல் ஏற்படுவது அல்லது பேச முடியாமல் போவது.

கண் பார்வை

கண் பார்வை

ஏதேனும் ஓர் கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு தென்படுவது. அல்லது மங்கலாக தெரிவது.

உணர்ச்சியின்றி போவது

உணர்ச்சியின்றி போவது

கை, கால்களில் திடீரென உணர்வின்றி போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்றவை ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாய அறிகுறிகள் ஆகும்.

உடல் எடை

உடல் எடை

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு 50% சதவீதம் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறதாம். முதன்மை காரணிகளில் முதலிடத்தில் இருப்பது உடல் பருமன் தான். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருந்து நீங்கள் உடல்பருமன் அதிகமாக இருக்கிறீர்கள் என்றால், உடனே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குங்கள்.

புகை மற்றும் மது

புகை மற்றும் மது

புகைப்பிடிக்கும் ஆண்கள் மத்தியில் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் 46% சதவீதமும், மது அருந்துவோர் மத்தியில் 22% சதவீதமும் அதிகமான வாய்ப்பு இருப்பதாய் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடல்நலக் கோளாறுகள்

உடல்நலக் கோளாறுகள்

இதய நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு 12% சதவீதமும், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு 32% முப்பது வயதில் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

குடும்ப மரபணு

குடும்ப மரபணு

சிலருக்கு மரபணு காரணமாக கூட ஸ்ட்ரோக் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் முந்தைய தலைமுறையினருக்கு ஸ்ட்ரோக் இருந்திருந்தால் உங்களுக்கும் ஸ்ட்ரோக் ஏற்பட 8% வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Risk Factor Stroke at 30

Stroke at age of 30, a big risk factor. Read here in tamil.
Desktop Bottom Promotion